பணம், நகையுடன் எஸ்கேப் ஆன காதலன்… பிக்பாஸ் புகழ் ஜூலி போலீசில் புகார்

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

சென்னை பரங்கிமலையில் புனித தோமையர் மலை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜூலியானா (26). இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு சமூக வலைதளத்தில் ட்ரெண்டானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்று செலிபிரெட்டியாக வளம் வர தொடங்கினார். அதன் பின்னர் திரைப்படம், சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள், போட்டோஷூட் என பிஸியாக வளம் வருகிறார்.

இந்நிலையில் இவர், நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26). அண்ணா நகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மனிஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்தோம்

கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததால் மனிஷ் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தார். இதனால் மனிஷுக்கு இருசக்கர வாகனம்,16 கிராமில் தங்க செயின், ஃபிரிட்ஜ் என 2.30 லட்ச ரூபாய் வரை செலவு செய்தேன்.

திடீரென மனிஷ் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து காதலை முறித்து கொண்டார். இதனை தொடர்ந்து மனிஷ் தொடர்ந்து என்னிடம் மேலும் பணத்தை பெற தொல்லை கொடுத்து வருகிறார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், மனிஷை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss julie files a case against boyfriend

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express