scorecardresearch

கல்யாண கோலத்தில் பிக் பாஸ் ஜூலி: ரசிகர்கள் திடீர் ஷாக்

பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்; காரணம் இதுதான்

BB Julie
பிக் பாஸ் ஜூலி

பிக்பாஸ் ஜூலி திடீரென திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜூலி. முன்னதாக நர்ஸ் ஆக பணிபுரிந்த வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: அந்தப் பாடல் காட்சியில் கட்டிப் பிடித்தபோது… ஷோபனாவுக்காக ரஜினி மறைத்த ரகசியம்!

பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதம் பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஒரு சில திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ள பிக் பாஸ் ஜூலி, தற்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், டிவி சீரியல் படப்பிடிப்பிற்காக தான் ஜூலி மாலையும் கழுத்துமாக நின்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடித்து வரும் ஜூலி, அந்த சீரியலுக்காக போட்ட திருமண கெட்டப் தான் இந்த புகைப்படங்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss julie marriage getup photos goes viral