பிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisment
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் :
அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் கொண்ட பெண்ணாக ஜூலி நடித்துள்ளார். இந்தப் படத்தை மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோர் இயக்கியுள்ளனர். அன்பு சரண் என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியானதும் நெட்டிசன்கள் பலர் ஜூலியை கலாய்த்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சாமி கதாபாத்திரத்தில் தோன்றும் ஜூலி செத்தவன் நீ திரும்பி வந்திருக்க, உன்ன அழிக்க நான் விரும்பி வந்திருக்கேன் என்ற பஞ்ச் வசனங்களை பேசியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.