ஜூலி காட்டில் மழை… மீண்டும் ஹீரோயின் ஆனார்… யாருக்கு ஜோடினு நீங்களே பாருங்க

பிக் பாஸ் பிரபலம் ஜூலி வெறியர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்றை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வேறென்ன… அடுத்த படம் பற்றி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் மரியா ஜூலியானா. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பி விமர்சனத்திற்கு உள்ளானார். இதனை தொடந்து அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்தது. முழுமையாக 100 நாட்கள் வீட்டின் உள்ளே இருக்க முடியவில்லை என்றாலும், 100 நாட்கள் இருந்தது […]

julie, ஜூலி
julie, ஜூலி

பிக் பாஸ் பிரபலம் ஜூலி வெறியர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்றை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வேறென்ன… அடுத்த படம் பற்றி தான்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் மரியா ஜூலியானா. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பி விமர்சனத்திற்கு உள்ளானார். இதனை தொடந்து அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்தது. முழுமையாக 100 நாட்கள் வீட்டின் உள்ளே இருக்க முடியவில்லை என்றாலும், 100 நாட்கள் இருந்தது போன்ற பிரபலத்தை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் பங்கேற்ற பலருக்கு வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல, ஜூலிக்கும் அவர் விருப்பம் போலவே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நெருங்கிய நண்பருடன் நடிக்கும் பிக் பாஸ் ஜூலி

சமீபத்தில் டிரெய்லர் வெளியான அம்மன் தாயி படத்தில் இவர் கிராமத்து பெண்ணாகவும், அம்மனாகவும் நடித்திருக்கிறார். இப்படம் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மருத்துவக் கல்வி கனவால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் கதையில் நடிக்கிறார். இந்த படத்தில் அனிதாவாகவும் நடிக்கிறார்.

நீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலியின் வெறித்தனம்

இரு படங்களும் இன்னும் திரைக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது 3வது படத்தில் இவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில், கதாநாயகியாக நடிக்கும் ஜூலி, அவரது நெருங்கிய நண்பர் மார்கம்ரான் இணைந்து நடிக்கிறார்.

எழில் துறை இயக்கும் இந்த படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இதனை ஜூலியானா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்தடுத்து ஜூலிக்கு வந்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பால், அவரது ரசிகர்கள் செம்ம ஹாப்பி அன்னாச்சி.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss julie to act in new movie with her best friend

Next Story
யோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா?kalyana vayasu, கல்யாண வயசு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X