அருள் வாக்கு சொன்ன ஜூலி! மிரண்டு நின்ற பக்தர்கள்!!!

டிவி ஷோ, புதிய படம் என பல பிராஜெக்டுகளில் பிஸியாகியுள்ள பிக் பாஸ் ஜூலிக்கு அடுத்த பிராஜெக்ட் ஒன்றில் முக்கிய கேரக்டர் மிரள வைத்துள்ளது.

பிக் பாஸ் ஷோ மூலம் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆன ஜூலி, தற்போது பல முக்கிய பிராஜெக்டுகளை கையில் வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சிறிது நாளிலேயே தனியார் தொலைக்காட்சியில், குழந்தைகள் நடன நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக ஆனார். இதைத் தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிராஜெக்ட் ஒன்று இவர் கைக்கு வந்தது. மருத்துவ கனவை சுமந்து நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை கதை படமாக உருவாகிறது. இதில் அனிதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜூலி.

ஏற்கனவே அனிதாவின் படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தனது ஃபாலோவர்ஸ்-க்கு அடுத்த சர்பிரைஸ் கொடுத்துள்ளார். தமிழில் “அம்மன் தாயி” என்ற பெயரில் உருவாகி வரும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜூலி. இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கும் இவர், அம்மன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

“அம்மன் தாயி” படத்தில், தெய்வ அம்சம் கொண்ட பெண்ணாக நடித்துள்ள இவர், அப்படத்தில் அருள் வாக்கெல்லாம் கூறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.

இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை கொல்லும் காட்சிதான் ஹைலைட் என்று கூறுகின்றனர். பல கெடுதல்களை செய்யும் வில்லனை அம்மனாக உக்கிரம் கொண்டு நடனம் ஆடி சூலத்தால் வதம் செய்துள்ளாராம்.

மகேஸ்வரன் மற்றும் சந்திர ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

×Close
×Close