Advertisment

கமல்ஹாசனின் உண்மை முகம் இதுதான்; ரசிகர்களை கேலி செய்யலாமா? சனம் ஷெட்டி, ஜோ மைக்கேல் கேள்வி

இந்த ரசிகர்கள் தான் உங்க படத்தை எல்லாம் பார்த்து சாதாரண நடிகர்களை ஸ்டார் ஆக்கியது; பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கலாய்க்கலாமா என சனம் ஷெட்டி மற்றும் ஜோ மைக்கேல் விளாசல்

author-image
WebDesk
New Update
Kamal Bigg Boss

இந்த ரசிகர்கள் தான் உங்க படத்தை எல்லாம் பார்த்து சாதாரண நடிகர்களை ஸ்டார் ஆக்கியது; பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கலாய்க்கலாமா என சனம் ஷெட்டி மற்றும் ஜோ மைக்கேல் விளாசல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விமர்சகர்களையும் ரசிகர்களையும் கலாய்த்தது சர்ச்சையாகி வரும் நிலையில், இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. எல்லா சீசன்களைப் போல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது. அதேநேரம் போட்டியாளர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசனையும் ரசிகர்களும் விமர்சகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதில், உச்சகட்டமாக கடந்த சனிக்கிழமை எபிசோடில் விமர்சகர்களையும் ரசிகர்களையும் கமல் கலாய்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து பிக் பாஸ் போட்டியாளரும் விமர்சகருமான சனம் ஷெட்டி முதல் ஜோ மைக்கேல் பிரவீன் வரை பலரும் கமலுக்கு எதிரான ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சீசனிலும் சோஷியல் மீடியாவில் குவியும் ட்ரோல்களுக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களுக்கும் கமல் மட்டுமே பதில் அளித்து வந்த நிலையில், இந்த சீசனில் அவரே டென்ஷன் ஆக ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

பரிதாபங்கள் கோபி, சுதாகர் எப்போதும் பிக் பாஸ் பாவங்கள் வீடியோ வெளியிடுவார்கள், அதில் பெரும்பாலும் போட்டியாளர்களை தான் விமர்சிப்பார்கள், ஆனால் இந்த முறை கமல்ஹாசனையே அதிக விமர்சனம் செய்துள்ளார்கள்.

அடுத்ததாக கமல்ஹாசன் எப்படி ரசிகர்களை விமர்சிக்கலாம் என விமர்சகர் ஜோ மைக்கேல் பிரவீன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கமல்ஹாசன் சார் ஓவ்வொரு வார இறுதியிலும் இப்படி கேட்க வேண்டியது எல்லாம் கேட்காம, டைம் பாஸா ஷோ நடத்தி, வாரம் முழுவதும் ரசிகர்கள் கிட்ட ட்ரோல் ஆனாலும், அத மாத்தாம, அப்படியே வேறு உடையுடன் அதே ஈகோ மனநிலையுடன் திரும்பி வர்றீங்க வேற மாதிரி சார்!

பைனல் டச் உங்க படம் பாக்குற எங்கள கலாய்ச்சது தான், உங்க படம் வரும் போதும் சமூக வலைதளங்களிலும் அவர்களது பொன்னான நேரத்தை செலவிட்டு உங்களுக்கு சப்போர்ட் பண்ண மக்களுக்கு தரமான செருப்படி கொடுத்ததற்கு நன்றி, இதுதான் உங்க உண்மை முகம்.. உங்க ஈகோ இந்த சீசனில் வெளியே வந்துடுச்சு,” எனப் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான சனம் ஷெட்டி ரசிகர்களை எப்படி கேலி பண்ணலாம், கமல் சார் இதெல்லாம் சரியே கிடையாது என விளாசி உள்ளார். சனம் ஷெட்டி எக்ஸ் தளத்தில், ”கமல் சார் ரசிகர்களை கேலி செய்வதை பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. பீக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும் அதற்கு சிரிக்கிறார்கள், இந்த ரசிகர்கள் தான் உங்க படத்தை எல்லாம் பார்த்து சாதாரண நடிகர்களை ஸ்டார் ஆக்கியது. படத்தை புரிந்துக் கொள்ள எங்களுக்கு டைரக்ஷன் பற்றித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இனி வரும் படங்களை இயக்குநர்களுக்காக மட்டும் பண்ணுங்க.. எங்களுடைய பணமும் உங்களுடைய பணமும் மிச்சம் ஆகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bigg Boss Tamil Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment