கிலி… கிலி… கிலி… குஜிலி, குஜிலி..!’ மொட்டை மாடியில் கவின் டான்ஸ்

Lift tamil movie update: லிப்ட் படத்தின் பிரமோஷனுக்காக கவின் மொட்டை மாடியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Kavin, Amritha Aiyer
Bigg Boss Kavin, Amritha Aiyer

சின்னதிரையில் நடிகராக இருந்தாலும், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட ஒருசிலர் பாடிய இந்த பாடலை இணையத்தில் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார். இன்னா மயிலு என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது லிப்ட் படத்தின் பிரமோஷனுக்காக கவின் மொட்டை மாடியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிலி… கிலி… கிலி… குஜிலி, குஜிலி.. என தொடங்கும் அந்த பாடலுக்கு கவின் நடனமாடுகிறார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது. படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss kavin dance in terrace for life movie promotion goes viral

Next Story
4 மாதங்களில் 3 மடங்கு… இன்ஸ்டாவில் இறக்கை கட்டிப் பறக்கும் சிவாங்கி! சூப்பர் ஸ்டார்களை விஞ்சி விடுவாரோ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com