சிவகார்த்திகேயனுடன் 2 படங்களில் பணிபுரியும் ’பிக் பாஸ்’ கவின்?

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Kavin with Siva Karthikeyan

Bigg Boss Kavin with Siva Karthikeyan

Bigg Boss Kavin : விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சில படங்களில் கவின் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தைப் பார்த்த கவின் விசிறிகள், சிவகார்த்திகேயனின் படத்தில் கவினும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர்.

“நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் ஏற்கனவே கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோவை ஹீரோவாக வைத்து, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: