Advertisment

’பிகில்’ தென்றலுக்கு ’பிக் பாஸ்’ கவின் ஸ்பெஷல் வீடியோ கால்!

ஸ்பாட்டில் தீவிர வேலையில் இருந்ததால், ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் கவின்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Kavin, Amritha Aiyer

Bigg Boss Kavin, Amritha Aiyer

சரவணன் மீனாட்சி என்ற வெற்றிகரமான தொலைக்காட்சி சீரியலில், நடித்த கவின் ’நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸின் மூன்றாவது சீசனில் பங்கேற்று அதிர்வலைகளை உண்டாக்கினார்.

Advertisment

சென்னையில் பெண்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு – உண்மை நிலவரம் என்ன?

நிகழ்ச்சியில் வெற்றிகரமாக பணியாற்றிய பிறகு, அறிமுக இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கிய லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் கவின். மேலும் இந்த படம் ஒரு லிஃப்டில் சிக்கித் தவிக்கும் இரண்டு பேரைச் சுற்றி வரும் ஒரு த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

தல, தளபதிக்கு இந்தப் பட்டியலில் இடம் இல்லையா?

விஜய்யின் பிகில் படத்தில் நடித்து புகழ் பெற்ற அமிர்தா ஐயர் தான் லிஃப்ட் படத்தின் கதாநாயகி. நேற்று அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த சமயத்தில், கவின் அமிர்தாவுக்கு வீடியோ அழைப்பு விடுத்து அவருடன் பேசியதோடு, தனது வாழ்த்துகளையும் அமிர்தாவுக்கு தெரிவித்தார். ஸ்பாட்டில் தீவிர வேலையில் இருந்ததால், ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் கவின்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment