/tamil-ie/media/media_files/uploads/2019/10/Bigg-Boss-Vanitha-Vijayakumar-Kavin.jpg)
Bigg Boss Vanitha Vijayakumar - Kavin
Bigg Boss Kavin: விஜய் டிவி-யில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் 3-வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. குறிப்பாக காதல், சண்டை உள்ளிட்ட விஷயங்களால் இந்த சீசன் பரபரப்பானது.
அதிலும் ”சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் பிரபலமாகியிருந்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்து, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானார். தன் நடவடிக்கைகளுக்காக பிக் பாஸ் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார், இருப்பினும் எல்லா வாரமும் காப்பாற்றப்பட்டார். தவிர, கவின், லாஸ்லியா, முகேன், சாண்டி, தர்ஷன் ஆகிய 5 பேர் கொண்ட ”வி ஆர் தி பாய்ஸ் கேங்” அந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் ஒருவழியாக கடந்த அக்டோபர் 6-ஆம் தேதியுடன் பிக்பாஸ் முடிவடைந்தது. இதனையடுத்து தர்ஷன், கவின், சாண்டி, முகேன் ஆகியோர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”வீ ஆர் தி பாய்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கவின் வனிதா முகம் பதிவிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்து வனிதா போல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Lol #Kavin thambiiiiii dai kondattam le paathukren unne ???? https://t.co/Ymv9hHaVx2
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 13, 2019
இதனை வனிதாவின் ட்விட்டர் ஐடியை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த வனிதா, கவின் தம்பி, டேய், கொண்டாட்டம்ல பார்த்துக்கிறேன் உன்ன'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். வனிதா பெரிதாக எதிர் வினையாற்றுவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us