வனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி

தர்ஷன், கவின், சாண்டி, முகேன் ஆகியோர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”வீ ஆர் தி பாய்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Bigg Boss Vanitha Vijayakumar - Kavin
Bigg Boss Vanitha Vijayakumar – Kavin

Bigg Boss Kavin: விஜய் டிவி-யில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் 3-வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. குறிப்பாக காதல், சண்டை உள்ளிட்ட விஷயங்களால் இந்த சீசன் பரபரப்பானது.

அதிலும் ”சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் பிரபலமாகியிருந்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி, சாக்‌ஷி, லாஸ்லியா உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்து, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானார்.  தன் நடவடிக்கைகளுக்காக பிக் பாஸ் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார், இருப்பினும் எல்லா வாரமும் காப்பாற்றப்பட்டார்.  தவிர, கவின், லாஸ்லியா, முகேன், சாண்டி, தர்ஷன் ஆகிய 5 பேர் கொண்ட ”வி ஆர் தி பாய்ஸ் கேங்” அந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் ஒருவழியாக கடந்த அக்டோபர் 6-ஆம் தேதியுடன் பிக்பாஸ் முடிவடைந்தது. இதனையடுத்து தர்ஷன், கவின், சாண்டி, முகேன் ஆகியோர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”வீ ஆர் தி பாய்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கவின் வனிதா முகம் பதிவிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்து வனிதா போல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதனை வனிதாவின் ட்விட்டர் ஐடியை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த வனிதா, கவின் தம்பி, டேய், கொண்டாட்டம்ல பார்த்துக்கிறேன் உன்ன” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். வனிதா பெரிதாக எதிர் வினையாற்றுவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss kavin vanitha vijayakumar we are the boys

Next Story
கோலிவுட்டில் நடிகராக களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்; யார் படத்தில் தெரியுமா?harbhajan singh, harbhajan singh kollywood,Cricketer Harbhajan Singh, harbhajan singh tamil movie, dikkiloona harbhajan singh,ஹர்பஜன் சிங், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங், சந்தானம் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங், dikkiloona tamil movie, santhanam, dikkiloona santhanam,Harbhajan Singh to make his Kollywood debut with Dikkiloona
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X