பிக் பாஸ் முடிஞ்சாலும் அந்த ஃபீவர் இன்னும் முடியலேயேப்பா - வீடியோ உள்ளே

Vijay TV Bigg Boss: “அடியேய் லாஸ்லியா என்னை நீ பாத்தியா” என்ற பாடலுக்கு கவின் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay TV Bigg Boss: “அடியேய் லாஸ்லியா என்னை நீ பாத்தியா” என்ற பாடலுக்கு கவின் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Kondattam

Bigg Boss Kondattam

Bigg Boss Kondattam: பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி இறுதிப் போட்டி நிறைவடைந்து 10 நாட்களாகிவிட்டன. இதில் மலேசிய பாடகரான முகேன் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தும் கூட, இதன் மீதான க்ரேஸ் இன்னும் குறையவில்லை.  கிராண்ட் ஃபைனலைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் அதன் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். தீபாவளி கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் வருடந்தோறும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது வழக்கம். தற்போது வந்துள்ள தகவல்களின் படி ஏற்கனவே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

Advertisment
Advertisements

இந்த நிகழ்வில் பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர்களின் ஸ்டன்னிங் பெர்ஃபார்மென்ஸ்கள் இடம்பெறும். பிக் பாஸ் தமிழ் 3-யின் போட்டியாளர்களான சாக்ஷி அகர்வால், ஷெரின் ஷ்ரிங்கர் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் இந்த நிகழ்விற்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில், சாக்‌ஷி, ஷெரினுடம் அபிராமியுடனுடம் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் படம்  அவர்களின் நடன ஒத்திகையின் போது எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நடன ஒத்திகையிலிருந்து ஒரு வீடியோவும் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் சாக்‌ஷி, அபிராமி மற்றும் ஷெரின் ஆகியோர் நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார்கள். தவிர, தான் நடனமாடும் வீடியோவை சாக்‌ஷி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதோடு லாஸ்லியாவும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. இதற்கிடையே “அடியேய் லாஸ்லியா என்னை நீ பாத்தியா” என்ற பாடலுக்கு கவின் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: