bigg boss kondattam vijay tv: பிக் பாஸ் சீசன் 3 முடிந்தால் கூட பிக் பாஸ் ஃபீவர் ரசிகர்களிடம் குறைந்த பாடில்லை. மற்ற 2 சீசன்களை தாண்டி ஏதோ ஒன்று இந்த சீசனில் ரசிகர்களை ஈர்க்க ஓவியா ஆர்மியை ஓவர்டெக் செய்து வருகிறது கவின் ஆர்மி.
Advertisment
அதுமட்டுமில்லை பிக் பாஸ் லாஸ்லியாவை அடுத்த கதாநாயகி என்றே ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள். ஒருபக்கம் அவரின் ஃபேன்ஸ் பேட்ஜ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. டைட்டில் வின்னர் முகென் பாடிய ’நீதான் நீதான்’ பாடல் இப்போது வரை யூடியூப்பில் ட்ரெண்ட். இந்த வரவேற்பை நன்கு புரிந்துக் கொண்ட விஜய் டிவி அடுத்தாக களம் இறங்கியது தான் பிக் பாஸ் கொண்டாட்டம்.
மற்ற 2 சீசன்கள் முடிந்த போதும் இதே பிக் பாஸ் கொண்டாட்டம் அரங்கேறியது. அதே போல் இந்த முறையில் பிக் பாஸ் சீசன் 3 வரும் ஞாயிற்றன்று ஒளிப்பரப்பாகவுள்ளது. இதில் கவினின் நடனம், முகெனின் பாடல், கனவுக்கண்ணன் தர்ஷனின் ஆட்டம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.
Advertisment
Advertisements
இதற்கான ப்ரமோவை விஜய் தொலைக்காட்சி 1 வாரமாக ஒளிப்பரப்பி ஆவலை தூண்டி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரமோவில் வனிதாவை கலாய்க்கும் சாண்டி தான் ஹலைட். பிக் பாஸ் வீட்டில் இந்த ரசிகர்கள், அந்த ரசிகர்கள் என்று இல்லாமல் அனைவரின் ஃபேவரெட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
இவரின் லோக்கல் கலாய், நக்கல், மிமிக்ரி, கானா அனைத்தும் மக்களும் ரொம்பவே பிடித்து போய் விட்டது. சாண்டி ஒருபுறம் என்றால் தனது வெறித்தனமான பேச்சாலே டாக் லிஸ்டுக்கு போன வனிதா வேற லெவல். இவரை எதிர்த்து பேசும் தைரியம் பிக் பாஸ் வீட்டில் யாருக்குமே இல்லை என்றே கூறலாம்.
அப்படிப்பட்ட வனிதாவை பங்கமாக கலாய்த்து சாண்டி பிக் பாஸ் கொண்டாட்டத்தில் சிறப்பு நடனத்தை அரங்கேற்றி இருக்கிறார். இதை வனிதா மட்டுமில்லை ஒட்டு மொத்த அரங்கமே கைத்தட்டி ரசித்துள்ளது.