'கவினை விரும்பும் அபி; லோஸ்லியாவை விரும்பும் கவின்; லோஸ்லியாவை வெறுக்கும் சாக்ஷி; சாக்ஷியை விரும்பும் கவின் - இப்பவே கண்ண கட்டுதே!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss 3 tamil

bigg boss 3 tamil

பிக்பாஸ் தமிழ் 3வது சீசனில், முதல் இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு காதல் கதகளிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சீசன் தொடங்கிய போதே, கவின் மீதான தனது காதலை, சக போட்டியாளர்களிடம் வெளிப்படுத்திய அபிராமி, கவினிடமும் அதை தெரிவித்தார்.

Advertisment

உலகிலேயே மிக புத்திசாலியாக, அனுபவசாலியாக தன்னை கற்பனை செய்து கொண்டு வீட்டில் உலாவி வரும் கவின், அபியின் காதல் ஆசையை, அபியையும் குழப்பி, நம்மையும் குழப்பி என்னமோ செய்து தவிர்த்தார். தொடர்ந்து தவிர்த்தும் வருகிறார். இதற்கிடையில், லோஸ்லியாவை ஒன்சைடாக டாவு விட்டுக் கொண்டிருக்கிறார். அதை விளையாட்டுத் தனத்துடன் பகிரங்கமாக லோஸ்லியாவிடமே கூறுகிறார்.

இதுவரை ஆண் நேயர்களின் கனவுக்கன்னியாக உலா வரும் லோஸ்லியா, கவினின் அந்த வெளிப்பாட்டை வெட்கத்துடன் ஏற்றுக் கொள்கிறார். அதேசமயம், அபிராமியின் உயிர்த் தோழியாய்(இதுவரை) சுற்றிக் கொண்டிருக்கும் சாக்ஷியையும் தனிமையில் தள்ளிக் கொண்டு பேசுகிறார், பேசுகிறார், பேசிக் கொண்டே இருக்கிறார் கவின். சாக்ஷியும் கவினை ஒன் சைடாக விரும்புவது நமக்கு தெரிகிறதோ இல்லையோ, கவினுக்கு நன்றாகவே தெரிகிறது.

Advertisment
Advertisements
July 2019

இதற்கிடையில், என்னங்கடி நா ரூட்டு விட்டா, இத்தனை பேரு அவனை ரூட்டு விடுறீங்க-னு அபி ஏகத்துக்கும் டென்ஷனாக, அதை அப்படியே படம் பிடித்து எடிட் செய்து புரமோவாக வெளியிட்டுள்ளது பிக்பாஸ் டீம். அதில், சாக்ஷி அழுந்து கொண்டு நிற்க, வனிதாவும், ஷெரினும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, இல்லாத இடுப்பை ஆட்டிக் கொண்டே கோபமாக கிராஸ் செய்கிறார் அபி. இந்நேரம் பாய்ந்து சாக்ஷிக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா? உயிர்த் தோழியாச்சே!!

July 2019

அப்போ என்னமோ இருக்கு... கவினை அபி விரும்ப, லோஸ்லியாவை கவின் விரும்ப, லோஸ்லியாவை சாக்ஷி வெறுக்க, சாக்ஷிக்கும் கவின் ரூட்டு விட, சாக்ஷியை அபி வெறுக்க..... அய்யயோ... ஆளை விடுங்கடா சாமி!

Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: