நடிகர் ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, தற்போது 6 ஆவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியைப் போலவே, நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர் இன்று தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகி, படங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: வறுத்தெடுப்பதில் ஆண்டவர் முதிர்ச்சிக்கு ஈடு உண்டோ: கமல் vs அசீம் ரோஸ்ட்
அந்தவகையில் முதல் சீசனில் கலந்துக் கொண்ட ஹரீஷ் கல்யாண், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்ட கவினும் லாஸ்லியாவும் தனித்தனியாக படங்களில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ஹரீஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவில் பிக் பாஸ் போட்டியாளர்களான கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏனெனில் கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தனர் ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவர்கள் பிரிந்துவிட்டனர். இதனை லாஸ்லியாவே பேட்டி ஒன்றில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறினார்.
அதன்பின் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டது இல்லை. காதல் முறிவுக்கு பின் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பதால், இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
இந்த விழாவில் கவின் தனியாக வந்து மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகை லாஸ்லியா கவர்ச்சி உடை அணிந்து வந்து தனது தோழிகளுடன் கலந்துக் கொண்டார். லாஸ்லியா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தது அனைவரும் ஆச்சரியப்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil