பிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் சூர்யா
Bigg boss Losliya new movie first look release by actor Surya: பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியாவுக்கு உதவி செய்யும் நடிகர் சூர்யா; புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்
பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்கும் புதியப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா.
Advertisment
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவருமே நல்ல புகழ் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றனர். இதில் சிலருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து விடுகின்றன.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்த லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் லாஸ்லியா மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்துக் கொண்ட தர்ஷனும் நடிக்கிறார். முக்கியமான கதாப்பாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு கூகுள் குட்டப்பா என்று படக்குழு பெயரிட்டுள்ளது. இந்த படத்தை சபரி-சரவணன் இயக்குகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். இந்த தகவலை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil