மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரலமான ஒரு திருநங்கை மேக்கப் கலைஞரின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு நேர்காணலில் அவர் திருமணத்திற்கு வர வேண்டும் என்று கூறி நடிகை அமலா பாலை அழைத்துள்ளார்.
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மூலம் கவனத்தை ஈர்த்தவர் ஜான்மோனி. பிரபல ஒப்பனை கலைஞரான இவர், மாடலிங் செய்து வரும், அபிஷேக் ஜெய்தீப்புடன் திருமணம் செய்துகொண்டது போன்ற புகைப்படங்கள், தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பேசப்படும் ஜோடியாக மாறியுள்ள இவர்கள், திருமண உடையில் இருக்கும் படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள பதிவுகளில், திருமண உடையில் இருவரும் கழுத்தில் துளசி மாலை அணிந்திருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவுடன்,, "ஜான்மோனியும் அபிஷேக்கும் இறுதியாக ஒன்று" என்ற வாசகத்துடன் பெரும் வைரலாக மாற்றப்பட்டு வருகிறது. இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் போது, "நீங்கள் ஒன்றாக வாழ்கிறீர்கள் என்று நிறைய கிசுகிசுக்கள் வந்தனவா?" என்று கேட்டபோது, இந்த திருமணம்தான் அத்தகைய கிசுகிசுக்களுக்கு பதில் என்று இருவரும் பதிலளித்தனர்.
தற்போது, ஜான்மோனிக்கும் அபிஷேக்குக்கும் இடையிலான ஒரு நேர்காணல் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நேர்காணலின் போது, ஒரு பிரபலத்தை உங்கள் திருமணத்திற்கு நேரில் அழைக்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ஜான்மோனி நடிகை அமலா பாலை அழைத்தார். ஜான்மோனி அமலாவை திருமணத்திற்கு அழைத்து, கட்டாயம் வர வேண்டும் என்று சொல்ல, அதற்கு அமலாவும் ஜான்மோனியை நீங்கள் ஹனிமூனை அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்மோனி, கேரளாவிற்கு வந்ததிலிருந்து பிரபல மேக்கப் கலைஞர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார். திருநங்கையான ஜான்மணி, ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அபிஷேக் மற்றும் ஜான்மோனி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்கள் அதிகம் பேசவில்லை என்றாலும், வெளியே வந்த பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அபிஷேக் மற்றும் ஜான்மோனி காதலிப்பது போன்ற கிசுகிசுக்கள் சில காலமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இதற்கிடையில், ஜான்மணி 53 கோடிக்கு சொந்தக்காரர் என்றும், அந்தப் பணத்திற்காகத்தான் அபிஷேக் ஜான்மோனியை மணந்தார் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதேபோல், அபிஷேக், தான் ஜான்மோனியை காதலிக்கவில்லை என்றும், ஒரு நபராக அவரை மிகவும் விரும்புகிறேன். ஜான்மோனி என்னை விட வயதில் மூத்தவர், திருநங்கை. எங்களுக்குள் அந்த மாதிரியான ஈர்ப்பு இல்லை. ஆனால், ஒரு நபராக, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஜான்மோனி நல்ல காமெடி மற்றும் ஜோக்கள் சொல்வார்.
நான் ஜான்மோனியின் அருகில் சென்றால், அங்கிருந்து நான் திரும்பி வரும் வரை சிரித்துக் கொண்டிருப்பேன். ஒட்டுமொத்தமாக, அவர் ஒரு வேடிக்கையான கேரக்டர். அதனால்தான் அவளுடன் நேரத்தை செலவிடுவது எனக்குப் பிடிக்கும்" என்று அபிஷேக் கூறியிருந்த நிலையில், தற்போது திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் உண்மையில் திருமணம் செய்து கொண்டார்களா? அல்லது இது விளம்பர ஸ்டண்டா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது,