பிக்பாஸ் பெயரில் மோசடி கும்பல் : எச்சரிக்கை விடுத்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்
BiggBoss Malayalam warns fans against fake auditions Tamil News: மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 4வது சீசன் கூடிய விரைவில் துவங்க உள்ளதாக பரவி வரும் தகவல் போலியானது என நிகழ்ச்சியை நடத்தும் குழு தெரிவித்துள்ளது.
Bigg Boss Malayalam TV series Tamil News: உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக 'பிக் பிரதர்' நிகழ்ச்சி உள்ளது. இது ஒவ்வொரு நாடுகளுக்கேற்ப தொகுக்கப்பட்டும், ஒளிபரப்பப்பட்டும் வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 'பிக்பாஸ்' என்ற பெயரில் இறங்குமதி செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisment
முதலில் ஹிந்தி-யில் மட்டும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, ரகர்களின் பெரும் வரவேற்பால் இந்திய மொழிகளுக்கு ஏற்ப தொகுத்து ஒளிபரப்ப திட்டமிப்பட்டது. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மலையாள பதிப்பு தற்போது 3 சீசன்களை எட்டியுள்ளது. இதை பிரபல நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 3வது சீசனுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டு போட்டியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், நிகழ்ச்சி 95 நாட்களை நிறைவு செய்ததால் ரசிகர்களின் வாக்குகள் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளதாக குழு அறிவித்தது.
Advertisment
Advertisements
இதற்கிடையில், பிக்பாஸ் 4வது சீசன் கூடிய விரைவில் துவங்க உள்ளதாகவும், அதற்கான போட்டியாளர்களாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியும் இணைய பக்கங்களில் ஒரு விண்ணப்பம் உலாவி வருகிறது. ஒருவேளை இதற்கான ஆடிஷன் நடக்கிறது என்றால் அதிகாரபூர்வமாக டிவியின் வலைத்தள கணக்கில் வெளியிடப்படும் என்றும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இது முற்றிலும் போலியான ஒரு தகவல் என்று மலையாள பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளது. மேலும் 4வது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு இப்போது நடைபெறவில்லை என்றும், இது போன்ற விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்த குழு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, இந்த போலி தகவலை பரப்பும் இணைய பக்கங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குழு குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“