/tamil-ie/media/media_files/uploads/2021/11/Akvup.jpg)
Bigg Boss New Love Jodi Varun Akshara love Tamil News
Bigg Boss New Love Jodi Varun Akshara love Tamil News : பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகள் மட்டுமல்ல காதலுக்கும் தனிப் பெயர் பெற்றது. ஓவியா-ஆரவ் ஜோடி தொடங்கி, கடந்த சீசனில் ஷிவானி-பாலா வரை ஏராளமான காதல் சர்ச்சைகள் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் இந்த சீசன் ஜோடி உருவாகியது.
வழக்கமாக சில வாரங்களிலேயே காதல் தீ பற்றிக்கொள்ளும். ஆனால், இம்முறை கொஞ்சம் தாமதமாகவே ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் இம்முறை பெரும்பாலான போட்டியாளர்கள் திருமணமானவர்கள். திருமணமாகாதவர்கள் வரிசையில் அக்ஷரா, மதுமிதா, வருண், ஐக்கி, சுருதி, நிரூப் மற்றும் இசைவாணி ஆகியோர் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ள வருண் மற்றும் அக்ஷராவிற்கு இடையில்தான் இப்போது புதிதாக காதல் மலர்ந்திருக்கிறது என்று கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடத்த டாஸ்க் ஒன்றில் ‘நீ கஷ்டப்படும் நேரத்தில் உன்னுடன் யார் இருப்பார்கள்‘ என்று அக்ஷராவிடம் கேட்கப்பட்ட போது, வருண் தான் தனக்கு எப்போதும் ஆறுதலாகப் பேசுவார் என்று அக்ஷரா கூறினார்.
மேலும், நேற்றைய நிகழ்ச்சிக்காக அக்ஷரா ஸ்கர்ட் ஒன்றை உடுத்தினார். அதைப் பார்த்த வருண், 'அந்த உடை நல்லா இல்லை' என்று கூறிய வருணிடம், 'நன்றாகத்தானே இருக்கிறது' என்று பதிலளித்தார் அக்ஷரா. அதற்கு, 'நன்றாகத்தான் இருக்கிறது ஆனால், எனக்கு பிடிக்கலை' என்று கூறினார் வருண். இதைக் கேட்டதுமே, அக்ஷரா வேறு உடையணிந்து கொண்டார்.
அதுமட்டுமல்ல, இல்லாத கெமிஸ்ட்ரியை இருப்பதுபோல உருவாக்குவதில் பிக் பாஸ் எடிட்டர் கில்லாடி. அந்த வரிசையில், நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா ராம்ப் வாக் செய்தபோது வருணையும், வருண் ராம்ப் வாக் செய்தபோது அக்ஷராவையும்ஃ போக்கஸ் செய்து காட்டினார் எடிட்டர். அவ்வளவுதான்… இனி நெட்டிசன்களின் டாக்ஸ் ஆரம்பம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.