பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.
Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா
பிக் பாஸ் 2 போட்டியில் பாலாஜி மற்றும் நித்யா பங்கேற்வுள்ளார் என்ற தகவல் வந்ததுமே நெட்டிசன்களுக்கு தீணி போட்டது போல் ஆயிற்று. அதிலும், நிகழ்ச்சியின் பங்கேற்ற பிறகு, இருவருக்கும் இடையே நடந்த மோதல் உட்பட நட்பு வரை அனைத்துமே வைரலானது. போட்டியின் இறுதியில், பாலாஜியும் நித்யாவும் நல்ல நட்புடன் பிரிந்து சென்றதை தமிழகமே பார்த்தது.
மும்பையில் கடந்த வாரம் தொடங்கிய புதிய கட்சியான தேசிய பெண்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்று சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவராக நித்யா தேஜூ பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு நடக்கும் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த கட்சியில் சேர்ந்த இவர், கட்சியின் சார்பாக பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.