ஒற்றுமை தொடரும்… கமலிடம் சவால் விட்ட பிரியங்கா; ஒவர் கான்பிடன்ஸ் வேண்டாம்… ரசிகர்கள் எச்சரிக்கை

Bigg boss priyanka confidence on housemates unity: ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்போம் என கமலிடம் சவால் விட்ட பிரியங்கா; பிக் பாஸ் பத்தி தெரியாமல் இப்படி சொல்லிவிட்டாரே என பிரியங்கா மீது அனுதாபப்படும் ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்போம் என பிரியங்கா சொன்னதற்கு ரசிகர்கள் இவ்வளவு நம்பிக்கை வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கி, தற்போது வெற்றிகரமாக முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது. வார இறுதியில் கமல் போட்டியாளர்களுடன் உரையாடும் எபிசோட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பானது.

முதல் வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று போட்டியாளர்களிடம் பேசிய கமல், போட்டியாளர்கள் தங்களைப் பற்றிய கூறியதையும், அதிலிருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், தனது கருத்துக்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை எபிஷோடில் கமல், பிக்பாஸ் வீட்டை நிர்வகிக்க பிரிக்கப்பட்ட குழுக்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார். போட்டியாளர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் பற்றி தனது கருத்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது கமல், இன்னும் எலிமினேஷன் ப்ரோசஸ் ஆரம்பிக்கவில்லை. கன்பஷன் ரூம் இன்னும் கன்ஃப்யூஷன் ரூமாக மாறவில்லை. அது துவங்கிய பிறகு தான் யாரெல்லாம் பின்னாடி பேச போகிறார்கள். யாருக்கு யாருடனெல்லாம் உரசல் நடக்க போகிறது என்று தெரியும். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என வாழ்த்தினால், ரசிகர்களை நான் ஏமாற்றியதாகி விடும். எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்றார்.

அதற்கு பதிலளித்த பிரியங்கா, இதே ஒற்றுமை தொடரும் சார். இந்த முறை எதிர்பார்ப்பது நடக்காமல் போகலாம். நிச்சயம் ஆடியன்சை அப்செட் ஆக்குவோம் என சவால் விடும் விதமாக கூறினார். அதற்கு பார்ப்போம் என மையமாக கூறினார் கமல்.

ஏற்கனவே பலருக்கு இடையில் சின்ன சின்ன உரசல்கள் ஆரம்பித்துள்ள நிலையில் பிரியங்கா அவசரப்பட்டு சொல்லி விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் டாஸ்க் மற்றும் எலிமினேஷன் எல்லாம் ஆரம்பிக்காத நிலையில், இவ்வளவு ஓவர் கான்பிடன்ஸ் வேண்டாம். பிக்பாஸ் பற்ற வைப்பது பற்றி தெரியாமல் ஒரு வாரத்திலேயே பிரியங்கா இப்படி வார்த்தையை விட்டுட்டாறே என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss priyanka confidence on housemates unity

Next Story
அட, இது எப்போ? சீரியலுக்கு வந்த செந்தில் – ராஜலட்சுமி!super singer fame senthil ganesh, super singer fame rajalakshmi, senthil ganesh rajalakshmi, singer couple senthil rajalaskshmi, செந்தில் - ராஜலட்சுமி, விஜய் டிவி, சூப்பர் சிங்கர் சீசன் 6, டிவி சீரியலில் நடிக்கும் செந்தில் ராஜலட்சுமி, கலர்ஸ் தமிழ் டிவி, இதயத்தை திருடாதே சீரியல், vijay tv, colours tv tamil, colours tamil, idhayathai thirudathe serial, senthil, rajalashmi, senthil rajalakshmi acting in tv serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X