New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-27.jpg)
Bigg boss priyanka youtube video goes viral on social medial
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் சீறும், சிறப்புமாக முடிந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் அதிக வாக்குகளை பெற்று, வெற்றி வாகை சூடினார். அவருக்கு கோப்பையுடன் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
Bigg boss priyanka youtube video goes viral on social medial
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததிலிருந்து, அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் கெட்-டூகெதர் மற்றும் பார்ட்டி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், வந்து மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆன சுரேஷ் தாத்தாவின் வீட்டுக்கு, ஐக்கி பெர்ரியும், தாமரையும் சமீபத்தில் சென்று வந்தனர்.
இதேபோல் அபிஷேக், அபினய், மதுமிதா, சுருதி, வருண், அக்ஷரா, அமீர், பாவனி ஆகியோரும் பார்ட்டி செய்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரியங்கா, வெகுநாட்களுக்கு பிறகு தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து அனைத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த ஷோவை நான் தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய ரிஸ்க் எடுத்துட்டுத்தான் இதை பண்ண போறோம்னு தெரிஞ்சிருந்தாலும், எந்த காரணத்தைக் கொண்டும் நான் உங்களை ஏமாத்திடக் கூடாதுனு எண்ணம் என் மனசுல எப்பவும் இருந்தது. அந்த இடத்துல ஒவ்வொரு நாளுமே நானாதன் நான் வாழ்ந்துட்டு இருந்தேன். அதுக்கு நீங்கதான் காரணம். நீங்க இல்லன்னா நான் இல்ல..
வாழ்க்கையிலே எனக்கு நிறைய ஏமாற்றங்கள் நடந்துருக்கு.. ஆனா என்னோட வேலை மட்டும் தான் என்னை எப்பவும் சந்தோஷப்படுத்திருக்கு.
அப்போது ஒரு ரசிகை ராஜூ கூட வீடியோ போடுங்க என்று கேட்க; அதற்கு பதிலளித்த பிரியங்கா; ராஜூ அவன் மனைவிய பாத்த உடனே ஓடிப்போயிட்டான். நாங்க எல்லாரும் ஃபோன்ல பேசிட்டுத் தான் இருக்கோம். உங்க எல்லாரையும் ஒன்னா பாக்குறோம் என்று கூறுகிறார்.
மேலும் ஒரு ரசிகர் அடுத்து என்ன பிக்பாஸ் அல்டிமேட்-ஆ எனக் கேட்க; அதற்கு பதிலளித்த பிரியங்கா, நானும் புரோமோ பாத்தேன். ஆனா அந்த ஷோ இல்ல நான் இல்ல..என இப்படி ஜாலியாக பேசிக் கொண்டிருந்த பிரியங்கா, ஒரு கட்ட்த்தில் எமோஷனாலாகி விட்டார். லைஃப்ல நான் நிறைய ஏமாற்றங்கள பாத்திருக்கேன். லவ்-ல தோத்து போயிருக்கேன்..வலியோட இருந்துருக்கேன்.. ஆனா நம்மள நாமே லவ் பண்ற விஷயம் இருக்குல்ல, அது நாம பண்ணுனா, எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் கடந்து வந்துரலாம்.
மேலும் கமல் ஒவ்வொரு வாரமும் பிரியங்காவை கண்டிப்பதை சுட்டிக்காட்டி பேசிய பிரியங்கா: நிறைய பேர் நானும், கமல் சாரும் டாம் அண்ட் சேர்ரி காம்பினேஷனு சொன்னாங்க.. எனக்கும் பாக்கும்போது அப்படித்தான் இருக்கும் என்று கூறினார். மறுபடியும் சூப்பர் சிங்கர்-ல உங்கள எப்போ பாக்கலாம் என ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த பிரியங்கா, அது எனக்கே தெரியல.. ஆனால் கூடிய சீக்கிரமா சொல்றேன் என பிரியங்கா கூறுகிறார்.
அத்துடன் பிக்பாஸ் வீட்டில் நான் நானாகத்தான் இருந்தேன். அப்படி இருந்தது ஒருசிலருக்கு வருத்த்ததை ஏற்படுத்தியிருந்தால், அட்ஜட்ஸ்ட் பண்ணிக்கோங்க. மேலும் என்னை பிடிக்காதவங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரி என்னை நான் மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன் என கூறுகிறார்.
மேலும், தாமரை, அபிஷேக், ராஜூ ஆகியோருடன் தன்னுடன் உறவு குறித்தும் பிரியங்கா அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.