Bigg Boss promo Abishek shows his real face Priyanka shock: உங்க கூட எல்லாம் வாக்குவாதம் பண்ணா தான் என் முகம் டிவியில் வரும் – அபிஷேக்; பிக் பாஸ் நியூ ப்ரோமோ
Bigg Boss promo Abishek shows his real face Priyanka shock: உங்க கூட எல்லாம் வாக்குவாதம் பண்ணா தான் என் முகம் டிவியில் வரும் – அபிஷேக்; பிக் பாஸ் நியூ ப்ரோமோ
பிரியங்கா கூட சேர்ந்து பழகுவது, டிவியில் தனது முகம் தெரிவதற்காக தான் என அபிஷேக் வெளிப்படையாக கூறியது பிக் பாஸ் போட்டியாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே அபிஷேக் அடிக்கடி ஏதாவது செய்து சர்ச்சையாகி வருகிறார். இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் பிக் பாஸ் ப்ரோமோவில், அபிஷேக்கின் உண்மை முகம் வெளிவந்துள்ளது.
அந்த ப்ரோமோவில், பார்த்த உடனே கண்டுபிடிக்கிற மாதிரி இடத்துல கொடுக்கிறதுக்கு இது என்ன பாரத விலாஸ்-ஆ, பிக் பாஸ் வீடு என ராஜூ பிரியங்காவிடம் டாஸ்க் குறித்து சொல்கிறார். மேலும், உங்க கூட இருக்குறதுலே ஒருத்தவங்க உங்கள வச்சு செஞ்சிட்டு இருக்காங்க என்றும் பிரியங்காவிடம் ராஜூ சொல்கிறார்.
அதற்கு, பிரியங்கா எல்லாருமே இதை சொல்றீங்க, நாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்கிறார். உடனே அபிஷேக் இடைமறித்து, நான் தான் இவள வச்சு செய்றேன், அப்ப தான் எனக்கு அட்டேன்ஷன் (விளம்பரம்) கிடைக்கும், ரொம்ப சிம்பிள் இவளோட ஒட்டினால் தான் என் முகம் டிவியில் தெரியும், அதுக்காக தான் பண்றேன் என்கிறார்.
Advertisment
Advertisements
உடனே இமான் அண்ணாச்சி, பிரியங்கா கூட சேர்ந்தாதான் உன் முகத்தை டிவியில் காட்டுவாங்கனு இப்படி பண்றியா என கேட்க, உங்களோட எல்லாம் இப்படி வாக்குவாதம் பண்ணா தான் என் முகம் டிவியில் வரும் என்கிறார் அபிஷேக். அதற்கு இமான் அண்ணாச்சி, அது ரொம்ப கேவலமான எண்ணம் என்று சொல்ல, அப்படியே வச்சுக்குங்க என்கிறார் அபிஷேக். இதைக்கேட்டு போட்டியாளர்கள் எல்லாம் முகம் சுழிக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், கமலஹாசன் வரும் சிறப்பு எபிஷோடில், அபிஷேக், பிரியங்காவை என அக்கா மாதிரி என கண்கலங்கி பேசி இருப்பார். ஆனால், இப்போது பிரியங்காவிடம் பழகுவது விளம்பரத்திற்காக தான் என அபிஷேக் கூறியது, பிரியங்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி பிரியங்கா அபிஷேக்கிடம் எப்போதும் போல் பழகுவாரா அல்லது பிரியங்கா கேங் உடைந்து விடுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil