bigg boss promo : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 58 ஆவது நாளான இன்று, அதன் 3 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லப்போனால் முதல் 2 ப்ரோமில் சொல்லிக்கொள்ளும் படி எந்த வித சுவாரசியமும் இல்லை. ஆனால் மூன்றாவது ப்ரோமில் வழக்கம் போல் வீடு ரெண்டாகிறது. அதற்கு காரணம் வனிதா vs கஸ்தாரி தான்.
Bigg Boss promo 1 : கடந்த வாரம் மதுமிதா மற்றும் அபியின் வெளியேற்றத்திற்கு பிறகு பிக் பாஸ் வீடு ஏதோ களையிழந்தது போல் காணப்படுகிறது. இதுவரை அபி முகெனை வைத்து நகர்ந்த ஸ்கிரிப்ட், கவினை வச்சி செய்த மதுமிதா என ஏதோ ஒருமாறி சென்றுக் கொண்டிருந்த பிக் பாஸ் இல்லம் திங்கட்கிழமை முதல் போரடிப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களின் தேவைக்கு தீனிப்போட்டுருக்கிறது கஸ்தூரி - வனிதா பிரச்சனை.
இன்றைய முதல் ப்ரமோ பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பள்ளி பருவத்திற்கு சென்றுள்ளனர். ஆம் எல்லா சீசனிலும் வருவது போல் பள்ளிக்கூடம் டாஸ்க் இன்று தொடங்குகிறது. அதற்கான முதல் ப்ரமோ இன்று காலை வெளியாகியது.
Bigg Boss promo 2:
இரண்டாவது ப்ரோமில் கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் ஆசிரியர்களாக உள்ளனர். மற்ற ஹவுஸ்மேட் எல்லாரும் பள்ளி சீருடையில் மாணவர்களாக அமர்ந்திருக்கின்றனர்.இதில் தான் வருகிறது முதல் பிரச்சனை. டீச்சர் கஸ்தூரி வாத்து பாடலை பாடும் படி வனிதாவை அழைக்கிறார். அதற்கு வனிதா தன்னை டீச்சர் வாத்து என அழைத்து விட்டதாக பிரச்சனை செய்கிறார். சேரன் புரியாமல் குழம்புகிறார்.
Bigg Boss promo 3:
\
கடைசி ப்ரமோ தான் இன்றைய நாளின் ஹலைட் . கஸ்தூரி தன்னை குண்டு என கூறிவிட்டதாக சண்டை போடுகிறார் வனிதா. 18 வயது பையனுக்கு அம்மா எப்படி இருப்பேன், என்னை பாருங்கள் என்று மற்ற போட்டியாளர்களிடம் முறையாடுகிறார் வனிதா. அவர்கள் எல்லோரும் வழக்கம் போல் அமைதியாகவே சண்டையை வேடிக்கை பார்கிறார்கள். அப்புறம் என்ன பின்னாடி போய் கதைப்பார்கள்.