/tamil-ie/media/media_files/uploads/2020/11/Bigg-Boss-Tamil-4-Promo-4.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Gaby Bala Shivani Archana Day 38 review
Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் வீட்டில் தற்போது பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் நடந்துக் கொண்டிருக்கிறது. பாட்டியான அர்ச்சனா தனது சொத்துக்களை பிரித்து தர நான்கு குழந்தைகளின் குடும்பத்தையும் வர வைத்து இருக்கிறார். அதில் சோம் சேகர், ரம்யா பாண்டியன் குடும்பம் மட்டும் அந்த பாத்திரத்தை திருட திட்டம் போட்டது.
ஆடுகளை திருடி சினிமா தயாரித்த சகோதரர்கள்: கையும் களவுமாக பிடித்த சென்னை போலீஸ்
#Day38#Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/yQJnyTy8Ap
— Vijay Television (@vijaytelevision) November 11, 2020
சோம் சேகர் செம திறமையாக பத்திரத்தை திருடி விட்டார். இதனால் ஷாக் ஆன அர்ச்சனா அதனை தேடும் படி அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், பாலாஜி முருகதாஸ் இது குறித்து சண்டை போட்டிருக்கிறார். பாலாஜி ரகசியமாக சென்று குப்பை தொட்டி அருகே எதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த ஷிவானி உள்ளிட்ட சிலர் அவர் தான் திருடன் என கூறி அவரை சீண்டினார். 'நான் சீரியஸாக எதுவும் செய்யவில்லை' என பாலாஜி சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் கோபமாகிறார் பாலாஜி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சோம், சைலண்டாக சிரிக்கிறார்.
#Day38#Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/vUfgPDOoOY
— Vijay Television (@vijaytelevision) November 11, 2020
இரண்டாவது ப்ரோமோவில், கேப்ரியலா பாலாஜியுடன் சண்டை போடுகிறார். அப்போது ஷிவானி இடையில் பேசியதால் 'நீ எதுக்கு பேசுற.. அவன் பேசட்டும்' என சொல்லி கத்தினார். இதனால் சண்டை பெரிதானது. அவர்களை விலக்கி விட பாலாஜி முருகதாஸ் முயற்சி செய்கிறார். இதுவரைவ் அமைதியாக இருந்த ஷிவானியா இப்படி சண்டை போடுகிறார் என ரசிர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
#Day38#Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/Yn4xQj6esh
— Vijay Television (@vijaytelevision) November 11, 2020
அடுத்த ப்ரோமோவில், இரண்டு செங்கற்கல்லை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட தூரத்தை கடக்க வேண்டும் என பிக் பாஸ் சொல்கிறார். இதற்கு ஜோடியாக இணைந்துக் கொள்ள வேண்டும். குறைந்த நேரத்தில் அந்த நேரத்தை கடப்பவரே இந்த டாஸ்க்கின் வெற்றியாளர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us