Today's Bigg Boss Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களை விட, அதன் ப்ரோமோக்களைப் பார்ப்பவர்களே அதிகம். தினம் வெளியிடப்படும் ப்ரோமோக்களில் ஏதாவது ட்விஸ்ட் வைப்பது பிக்பாஸின் வழக்கம்.
Advertisment
ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ட்விஸ்ட் எல்லாம் இல்லை. ஆண் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெண்கள் உடை அணிந்துக் கொண்டு, பெண்கள் போல உடல்மொழியைக் கடைப்பிடிக்கிறார்கள். கம்மல், ஹேர்பேண்ட், ஜடை, பவுடர், லிப்ஸ்டிக் என பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார்கள்.
அவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால், வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு ஆண் போட்டியாளர்கள் இமிடேட் செய்ய வேண்டுமென்று பிக்பாஸ் கூறியிருப்பாரோ எனத் தோன்றுகிறது. லிவிங் ஏரியாவில் நடக்கும் இந்த அதகளத்தை, சோஃபாவில் அமர்ந்தவாறு சிரித்து சிரித்து விழுகிறார்கள் பெண்கள்.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. அதில் சாக்ஷியும், ஷெரினும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். “கவின் முழுசா மாறிட்டான். நைட் சாப்பிட்டு இருக்கும் போது ஏன் என்னாச்சு? ஏன் என்ன கூப்பிடலைன்னு கேட்டேன், இல்ல எனக்கு சுர்ருன்னு ஏறிடுச்சு அதான்னு சொன்னான், ஸோ, நான் அப்படியே நிறுத்திட்டேன்” என்கிறார் சாக்ஷி. ”இப்போ மாதிரியே ஃபிரெண்ட்ஸாவே இருப்போம். ஆனால் எதிர்காலத்துல எப்படி மாறும்ன்னு தெரியாது” என்கிறார் ஷெரின்.
எப்போதும் ஏதாவது பரபரப்புடன் வெளியாகும் பிக்பாஸ் ப்ரோமோக்களுக்கு இடையில் இன்று வெளியான 2 ப்ரோமோக்களும், ‘சப்பென்று’ இருப்பதால், இன்றைக்கு நிகழ்ச்சி நன்றாக இருக்காதோ என கேட்கிறார்கள் ரசிகர்கள்.