கமல்ஹாசன் அப்படி பேசுறதால நமக்கு அப்படி தோணுதா, இல்ல நமக்கு அப்படி தோணுறதுனால கமல் ஹாசன் பேசுறதை அப்படி நினைக்கத் தோணுதா??
புரியலைல....?
வாரா வாரம் வீக்கெண்ட் பார்ட்டி வைப்பது போல, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீக்கெண்ட்களில் கமல்ஹாசன் வந்து தீர்ப்போ, கண்டிப்போ, குத்திக் கட்டலோ, நக்கலோ, சமாளிப்போ... இதில் ஏதோ ஒரு 'ஓ' வை போட வருவதும், மக்கள் அதை பார்த்து ரசிப்பதும் வழக்கம்.
வீக்கெண்ட் வருகையின் போது ஏதாவது ஒரு பன்ச் சொல்லிக் கொண்டே வருவது கமல்ஹாசன் ஸ்டைல். கடந்த வாரம் வந்த போது, 'தலைமை தன்னிலை உணர வேண்டும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும். அப்படி இல்லைனா என்ன நடக்கும் என்பதை இத்தனை நாளாக பார்த்துட்டோம். இப்போது நாமும் இருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும் நேரம் வந்துவிட்டது' என்று லீட் கொடுத்து பேசினார்.
இந்த வாரம், "மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது இதெல்லாம் இந்த வீட்டுக்கு சகஜமாகிடுச்சு" என்று லீட் கொடுத்து ஆண்டவர் நிகழ்ச்சியை தொடங்குகிறார்.
'தலைமை தன்னிலை உணரனும்-ங்கறது, தன்னிச்சையா செயல்படணும்-ங்கறது, மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது எல்லாம் சகஜமாகிடுச்சு'-னு கமல் சொல்றதெல்லாம், பிக் பாஸ் வீட்டை மட்டும் தான் என்பதை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். வேறு எதைப் பற்றி அல்ல... சரியா!!
சரி விடுங்க.. போழுதுபோக்குல அரசியலை மிக்ஸ் பண்ண வேண்டாம். கம்மிங் டூ த பிக்பாஸ் ஹவுஸ், இந்த வாரம் பலியாடு கவின் என்பது இன்றைய புரமோ மூலம் தெள்ளத் தெளிவாகிறது. சாக்ஷி, லோஸ்லியா என்று அவர் காட்டிய Feelings-களை மக்கள் ரசிக்கவில்லை. அதை இன்று கமல்ஹாசன் நிச்சயம் உணர்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். லவ்வுவது போல் பேசிவிட்டு, டக்குன்னு பிரெண்ட்ஸ் என்று சாக்ஷி மனதை அவர் உடைத்ததை மன்னிக்க முடியுமா மக்களே!!