/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1327.jpg)
bigg boss promo losliya kavin sakshi meera mithun kamal haasan - 'கவின் மேல லவ் இல்ல; ஆனா பிடிக்கும்' - லோஸ்லியா முடிவும்; ஆர்மியின் கொண்டாட்டமும்
பிக்பாஸ் இல்லத்தில் இன்றைய புரமோவும் நேற்று மாதிரியே காதல் கதைகளையே பேசுகின்றன. யப்பா பிக்பாஸ், வேற மாதரி யோசிங்கப்பா... போர் அடிக்குது.
சரி விஷயத்துக்கு வருவோம்... நேற்றே, 'சாக்ஷி மீதும் காதல் இல்லை, லோஸ்லியா மீதும் காதல் இல்லை. சும்மா எல்லாம் ஒரு ஜாலி தான், நான் ஒரு பிரெண்டா தான் பழகிட்டு இருக்கேன்' என்று திருவாளர் கவின் தெளிவுப்படுத்தி விட்ட நிலையில், இன்று அதன் நீட்சியாக லோஸ்லியாவும், சாக்ஷியும் அதுகுறித்து விவாதித்து வருகின்றனர்.
#Day25#Promo2#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#VijayTelevisionpic.twitter.com/Fai1w6MyIL
— Vijay Television (@vijaytelevision) 18 July 2019
புரமோவில் பேசும் லோஸ்லியா, "நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன்.. கவின் மேல லவ்லாம் இல்லை. ஆனா பிடிக்கும்' என்று பீலிங்ஸ் காட்ட, பதிலுக்கு நம்ம சாக்ஷி, 'கவின் மேல எனக்கு பொசஸிவ் வந்தா தப்பா?' என்று அப்ராணியாக கேள்விக் கேட்கிறார். எப்படியோ கவின் மேல எனக்கு ஒன்னும் இல்லை என்று லோஸ்லியா தெரிவித்த பிறகு, 'அப்படி சொல்லுடி என் செல்லாக் குட்டி' என்று லோஸ்லியா ஆர்மிகள் ஹேப்பியில் உள்ளனர்.
#Day25#Promo3#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#VijayTelevisionpic.twitter.com/TrWaRSy7E1
— Vijay Television (@vijaytelevision) 18 July 2019
இந்த கூத்து ஒருபுறமிருக்க, ஒரு ஜெயிலில் சாக்ஷியையும், மீரா மிதுனையும் பிக்பாஸ் போட்டு வைக்க, வழக்கம் போல் வழ வழா கொழ கொழா என்று 30 நொடிகளில் வரும் புரமோவில் பேசிய சாகடிக்கிறார் மீரா. இதனால், சாக்ஷியே காண்டாகி கத்த ஆரம்பித்துவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.