வர வர பாக்குறது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவா, அல்லது பக்கா ஸ்க்ரிப்டட் காதல் படமா-னு தெரியல... அவ்ளோ அழகா போட்டியாளர்கள் பெர்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. கமல்ஹாசனை தாண்டி நாம் யாரையும் நம்ப வேண்டியதில்லை. அவரும், முதல் சீசனில் இருந்து, 'எதுவும் நாடகம் இல்லை; எல்லாம் ஒரிஜினல் தான்' என்று சத்தியம் செய்கிறார். அதை நம்பித் தான் நாமும் பார்க்கிறோம். ஆனால், நடப்பது எதுவும் நம்புற மாதிரியே இல்லையேப்பா...
கடந்த சில இரு வாரங்களாக கவின் இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அவரும் விளையாட்டு என்கிற பெயரில் சாக்ஷியிடமும், லோஸ்லியாவிடமும் சற்று எல்லை மீறியே நடந்து கொண்டார். அதைத் தான் கடந்த வாரம் கமல்ஹாசன், 'உணர்வுகளோடு விளையாடாதீர்கள்' என்று கவினிடம் கூறினார். தவிர, லோஸ்லியாவும் 'கவின் நடிக்கிறார்' என்று போட்டுடைக்க, 'அப்போ இதெல்லாம் நடிப்பா கோபால்' என்று சாக்ஷியும் கண்ணீர் வடிக்க, கவின் பாய் ரொம்பவே அப்செட்.
இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் பிக் புரமோவில் கவினிடம் கிசிகிசுக்கும் லோஸ்லியா, "நான் அந்த வார்த்தையை சொல்லி இருக்கக் கூடாது. நீ நடிக்குற மாதிரி தெரியுதுன்னு சொல்லி இருக்கக் கூடாது. நா சுகமில்லாம இருந்தபோது, என்னை நீ பார்த்துக்கிட்ட. அதெல்லாம் நீ நடிக்குற-னு சொல்லிட்டேன். சாரி..." என்று கவினிடம் மன்னிப்பு கேட்கிறார்.
அப்போ, கவின் தான் இந்த வார பிக்பாஸ் ஹீரோ போல என்று நினைக்கத் தோன்றுகிறது. 'அசைன்மென்ட் படி, முதல்ல டேமேஜ் செய்தாச்சு.. இப்போ லோஸ்லியாவை வச்சே குட் பாய் இமேஜ் கொடுக்குறாங்க பாரேன்' என்று நாம் சிபிசிஐடி ரேஞ்சுக்கு மூளையை குடாய்ந்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க, கவினை லோஸ்லியா வெறுத்ததால் கொண்டாட்டத்தில் இருந்த லோஸ்லியா ஆர்மி, இப்போது தங்கள் தலைவியின் பேச்சைக் கண்டு வேதனையின் உச்சத்தில் இருக்கின்றனர்.
எல்லாம் சரி... அப்போ எங்க தலைவி சாக்ஷி நிலைமை?...
ஏது.. தலைவி சாக்ஷியா??.... முடியலடா சாமி!!!