Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் கிழமை தோறும் நாமினேஷன் ப்ராசஸ் நடக்கும். அந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட வேண்டிய நபர்களை, இதில் போட்டியாளர்கள் நாமினேட் செய்வார்கள்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரோமோவில், ‘பிக்பாஸ் தமிழ் 3-ம் சீசனில் முதலாவது ஓபன் நாமினேஷன்’ என அறிவிக்கிறார் பிக்பாஸ். போட்டியாளர்கள் அலறுகிறார்கள். லாஸ்லியாவை அழைத்து நீங்கள் நாமினேட் செய்யும் அந்த 2 நபர்கள் யார், என்ன காரணம் என்கிறார்.
“ஃபர்ஸ்ட் மது, சாண்டியோட பிராப்ளம் சால்வ் ஆகிடுச்சு. அதுக்கு சாரி கேட்டாச்சு. ஆனா நேத்து நீங்க ரியாக்ட் பண்ணுனீங்க. இங்க ஒவ்வொருத்தரும் எப்படி பாக்குறாங்கன்னு எனக்கு தெரில, பட் நான் ரெண்டாவதா சாக்ஷிய நாமினேட் பண்றேன்” என்கிறார்.
லேசான புகையும் சண்டைகளை கொழுந்து விட்டு எரிய செய்வதற்காக கொண்டு வருவதே ஓபன் நாமினேஷன். ஆக இனி இன்னும் தீவிரமான சண்டைகளை பிக்பாஸ் வீட்டுக்குள் காணலாம்.