‘இந்த வீட்டில் எனக்கு அவளைத் தான் புடிக்கும்…’ பிரியங்கா பெயரைச் சொல்லி அழுத அபிஷேக்!

Bigg boss promo priyanka feels abhishek is my cousin: எங்க அக்கா தான் என்னை வளர்த்தாங்க… இந்த வீட்டில் எனக்கு அக்கா பிரியங்கா தான்; அபிஷேக் நெகிழ்ச்சி

பிக் பாஸ் வீட்டில் எனக்கு பிரியங்காவைத் தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் சொல்லும் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கமலஹாசன், போட்டியாளர்களுடன் உரையாடும் எபிஷோடு ஒளிப்பரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ப்ரோமோவில், கமலஹாசனிடம், இந்த வீட்டில் எனக்கு பிரியங்காவைத் தான் ரொம்ப பிடிக்கும் என கண்கலங்குகிறார் அபிஷேக். உடனே பிரியங்கா அவரிடம் சென்று ஆறுதல் சொல்கிறார். அப்போது அபிஷேக், எங்க அக்கா தான் என்னை வளர்த்தாங்க. அவங்க திருமணம் ஆகி சென்றதை என்னால் அக்செப்ட் பண்ணிக்க முடியவில்லை என அழ, அபிஷேக்கை தேற்றுகிறார் பிரியங்கா.

பின்னர், பிரியங்கா என்னோட மனசுக்கு அவன் எனக்கு தம்பி மாதிரி தான் தெரியுறான். நாங்க இரண்டு பேரும் இந்த வீட்டில் கசின்ஸ் மாதிரி தான் சுத்திக்கிட்டு இருப்போம் என்கிறார்.

விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் இந்த ப்ரோமோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss promo priyanka feels abhishek is my cousin

Next Story
இளமைத் தோற்றத்தில் ரஜினி டூயட்: அண்ணாத்தே அடுத்த பாடல் ரிலீஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com