பிரியங்கா- நிரூப் திடீர் ஃபைட்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Bigg Boss Promo Priyanka fight with Niroop: பிரியங்கா கேங் உடைகிறதா? நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும் சண்டை; பிக் பாஸ் நியூ ப்ரோமோ

Bigg Boss Promo Priyanka fight with Niroop: பிரியங்கா கேங் உடைகிறதா? நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும் சண்டை; பிக் பாஸ் நியூ ப்ரோமோ

author-image
WebDesk
New Update
பிரியங்கா- நிரூப் திடீர் ஃபைட்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவுக்கும் நிரூப்புக்கும் இடையே சண்டை நடப்பதுபோல் வெளியாகியுள்ள ப்ரோமோவால், பிரியங்கா கேங் உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. போட்டியாளர்களுக்குள் மனகசப்பு மெல்ல மெல்ல வெளிப்பட தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றிரவு (சனிக்கிழமை) எபிசோடில் கமல்ஹாசன் மற்றவர்களைப் பாதிக்கும் அபிஷேக் ராஜாவின் விளையாட்டு முறையைக் கண்டித்தார். மேலும் மற்றவர்களைப் பற்றி புகார் செய்யும் போது பிரியங்காவை நியாயமாகவும் சரியாகவும் இருக்கும்படி குறிப்பிட்டார். கூடுதலாக, பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டினார். இதனால், நேற்றைய எபிசோடு பரபரப்புடன் சுவாரசியமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், அவர்கிட்ட கேட்கணும்னு சொல்லிட்டல்ல, அவர்கிட்ட நீ மொதல்ல கேளு, நா பதில் கொடுத்துக்கிறேன் என பிரியங்கா சொல்ல, இப்ப எதுக்கு சொன்ன, அப்பவே சொல்லிருக்கலாம் என கோபப்படுகிறார் நிரூப். அபிஷேக் இருவரையும் சமாதானம் செய்ய முயல்கிறார்.

Advertisment
Advertisements

அப்போது பிரியங்கா, இது நீ ஃப்ரெண்டுக்கு செய்யுற அநியாயம், என்னோட காயினை நீ வச்சிகிட்டு, என்கிட்ட கூட சொல்லலியே என ஆவேசமாக கத்துகிறார். உடனே நிரூப் அது உன்னோட தப்பு என சொல்ல, நான் உனக்கு பதில் சொல்லிட்டேன், இதோட முடிச்சிக்கலாம் என வெறுப்பாக சொல்கிறார் பிரியங்கா.

பிரியங்காவும் நிரூப்பும் வீட்டிற்குள் எப்போதும் ஃப்ரண்ட்ஸாக இருப்பார்கள். இப்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில், இவர்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொள்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிரூப் செய்த தவறை பிரியங்கா சுட்டிக்காட்டியதால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv Vj Priyanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: