பாலாஜி-ஷிவானியை வச்சு பிக் பாஸ் ஏதோ பிளான் பண்றாரு...

ரம்யா தனது அம்மாவைப் பற்றி கூறும் போது வார்த்தைகள் வராமல், அழுகிறார்.

ரம்யா தனது அம்மாவைப் பற்றி கூறும் போது வார்த்தைகள் வராமல், அழுகிறார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hasan Aari Anita Archana Bala Day 27

Bigg Boss 4 Tamil 4 Bala and Shivani

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். மகிழ்ச்சி, துக்கம், கண்ணீர், சண்டை, காதல் என பல உணர்வுப் பூர்வமான தருணங்கள் அந்த ப்ரோமோக்களில் முக்கியத்துவம் பெரும்.

Advertisment

Tamil News Today Live: தமிழகத்துக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

அதே மாதிரி தான் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. ‘நீங்கள் மிஸ் பண்ணும் நபர்’ குறித்து பகிர்ந்துக் கொள்ளும் படி பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இதனை கன்பெஷன் ரூமில் வைத்து அர்ச்சனா படிக்கிறார். அப்போதே அவரது குரல் தழுதழுக்கிறார்.

Advertisment
Advertisements

ரம்யா தனது அம்மாவைப் பற்றி கூறும் போது வார்த்தைகள் வராமல், அழுகிறார். ‘என்னோட ஹஸ்பண்ட் கார்த்திக் பத்தி நா அவ்ளோவா பேசினதே இல்ல’ என சம்யுக்தா கலங்குகிறார். ‘பாலாஜியைப் பார்க்கும் போது எனக்கு என் பையன் ஞாபகத்துக்கு வர்றான்’ என உடைந்து போகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. இப்படி போட்டியாளர்கள் அனைவரும், தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோ-வில் ஒருநாள் முழுவதும், ஷிவானியை பணிப்பெண்ணாக பாலாஜி பயன்படுத்திக் கொள்ளலாம் என அர்ச்சனா அறிக்கை வாசிக்கிறார். பாட்டுப் பாடுவது, விசிறி விடுவது, பாலாஜி போகுமிடமெல்லாம் குடை பிடிப்பது என தனது வேலையில் இருந்து பின் வாங்காமல் செய்கிறார் ஷிவானி. பின்னணியில் தனுஷ் பாடல் ஒலிக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: