Advertisment

அபிஷேக் காலில் விழுந்த தாமரைச்செல்வி… காரணம் என்ன?

Bigg Boss Promo Thamaraiselvi falls abishek feet: தாமரையை காப்பாற்றும் பிரியங்கா கேங்; சின்னபொண்ணுக்கு இமான் அண்ணாச்சி ஆதரவு; பிக் பாஸ் நியூ ப்ரோமோ

author-image
WebDesk
New Update
அபிஷேக் காலில் விழுந்த தாமரைச்செல்வி… காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் காலில் விழுந்து தாமரைச்செல்வி கெஞ்சுவது போல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 இரண்டு வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் தினம் தினம் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது.

நிகழ்ச்சியில் தற்போது, போட்டியாளர்களுக்கு பஞ்சதந்திரம் என்கிற லக்ஸரி பட்ஜெட்டுக்கான புது டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு 5 விலை மதிக்க முடியாத நாணயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாணயங்களை ஹவுஸ்மேட்ஸ் பாதுகாக்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்த நாணயங்களை கைப்பற்றும் போட்டியாளர்கள் நாமினேஷன் புராசஸ்ஸில் இருந்து தப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் நாணயங்களை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். சிலர் நாணயங்களை கைப்பற்றியும் விட்டனர்.

இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய  ப்ரோமோ வீடியோவில் தாமரைச்செல்வி மற்றும் சின்னபொண்ணு இருவரில் ஒருவரை காப்பாற்ற வேண்டுமென அனைத்து போட்டியாளர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் அபிஷேக், பிரியங்கா டீம் தாமரைச்செல்விக்கு ஆதரவாக செயல்படுகிறது. ப்ரோமோவில் அபிஷேக் உனக்காக தான் எல்லோரும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம் என தாமரைச்செல்வியிடம் சொல்கி்றார். அதனால் தாமரைச்செல்வி அபிஷேக் காலில் விழுந்து, நீ சொன்னதே போதும் என அழுகிறார்.

பின்னர் இமான் அண்ணாச்சி, ராஜூவிடம் நீங்க யாரை காப்பாற்ற போகிறீர்கள் என கேட்க, ராஜூ தாமரை என்கிறார். பிரியங்காவும் தாமரையை தான் காப்பாற்றுவதாக கூறுகிறார்.

பின்னர், ஏன் எல்லோரும் தாமரைச்செல்விக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் சின்ன பொண்ணுக்கு யாராவது வாக்களியுங்கள், தாமரையை காப்பாற்ற பலர் இருக்கிறார்கள் என இமான் அண்ணாச்சி வந்து பிரியங்காவிடம் கேட்கிறார். ஆனால் நான் சின்னபொண்ணுவை தான் நாமினேட் செய்தேன் என இமானிடம் பிரியங்கா உறுதியாக கூறிவிடுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment