Bigg boss promo today : பிக் பாஸ் வீட்டில் இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் தரிசனம் தான். கடந்த 2 நாட்களாக பெரும் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஹவுஸ் மேட்ஸூக்கு இன்று என்ன சொல்ல போகிறார் கமல்? அட்வைஸா இல்லை கண்டிப்பா?
”போதும்டா சாமி எங்களை விடுங்கடா” -ன்னு பிக் பாஸ் ரசிகர்கள் கெஞ்ச தொடங்கி விட்டார்கள் .இதற்கு காரணமே கவின் - சாக்ஷி- லாஸ்லியா தான். போதும் போதும் என்ற அளவுக்கு மூவரும் தங்களது தரப்பு நியாய தர்மங்களை கூறி விட்டனர். கடைசி வரை மூவரும் சொல்வது யாருக்குமே புரியவில்லை என்பது தான் இதில் ஹலைட். நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் புரியவில்லை என்று நினைத்தால் ஹவுஸ் மேட்டுக்கே புரியாமல் இருப்பது எங்கே போய் சொல்லி அழுவது என்று தெரியவில்லை.
கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய இவர்களின் பிரச்சனை வியாக்கிழமை வரை ஓய்ந்த பாடில்லை. ஒருபக்கம் சாக்ஷி அழ, மறுபக்கம் லாஸ்லியா கதற, கவின் கையெடுத்து கும்மிட்டு விட்டார். கண்டிப்பாக இந்த வாரம், கமல்ஹாசன் இவர்களுக்கு ஒரு தீர்வு சொல்வார் என எதிர்பார்த்த நிலையில் ”இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே” என்பது போல் அவரே வந்து வாய் கொடுத்து மாட்டி இருக்கிறார் நம்ம சித்தப்பு. அவருண்டு அவரு வேலையுண்டு இருக்காரு பா.. தைரியமாக தப்ப ஒத்துக்கொள்வார் என சித்தபு சித்தப்பு என பொங்கியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரென்று தரக்குறைவான வார்த்தையை பேசி சிக்கலில் சிக்கினார் சரவணன்.
சேரனிடம், சரவணன் பேசிய விதம் கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது. ஏற்கனவே மீரா விஷயத்தில் சேரனுக்கு பலமான ஆதரவு கூட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த நேரத்தில் சித்தப்புவின் ஓவர் பேச்சு அவருக்கு எதிராக மாறியுள்ளது.
கமல் சார் உங்க பதில் என்ன்?
இதுவரை சித்தப்பு விஷயத்தில் கமல் எப்போதுமே சரவண்ணுக்கு ஆதரவாக தான் பேசுவார். கைத்தட்டலும் வரும். ஆனால் இம்முறை எப்படி என்று தெரியவில்லை. ஒருபக்கம் கவின் பஞ்சாயத்து, மறுபக்கம் சரவணன் வாய்க்கா பிரச்சனை மொத்தத்திற்கு இன்று தீர்ப்பு சொல்வார் கமல்ஹாசன். வெயிட் அண்ட் வாட்ச்.