bigg boss promo today : பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினத்தின் முதல் 2 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இதுவரை "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” என சுற்றிக் கொண்டிருந்த முகென் - அபி காதலுக்கு மொத்தமாக சங்கு ஊதி விட்டாரு வனிதா.
மேலும் படிக்க - வந்தார்... கதைத்தார்... முடித்தார்! முகேன் - அபி காதலுக்கு ஒரே மாலையில் 'மாலை' போட்ட வனிதா
bigg boss promo 1: பிக் பாஸ் வீடு கடந்த சில நாட்களாக ரொம்ப அமைதியா, எல்லாருக்குமே கேம் புரிந்து விட்ட மாறி ஹாப்பி ஹவுசா செல்வது பிக் பாஸுக்கே பிடிக்கவில்லை போல. தீடீரென்று வெளியே போன வனிதாவை சிறப்பு விருந்தினராக மீண்டும் உள்ளே அனுப்பி அழகு பார்க்கிறார். இல்லை இல்லை பிக் பாஸ் போட்டியாளர்களை அழ வைத்து பார்க்கிறார்.
உள்ளே போன வனிதா சும்மா இருப்பாரா என்ன? போன முதல் நாளே கிழி கிழின்னு வச்சி செஞ்சிடாரு. இத்தனை நாள் அவர் வெளியில் மக்கள் போட்டியாளர்களை பற்றி என்ன பேசுகிறார்கள், எப்படி பார்க்கிறாகள், என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டார். அதையெல்லாம் வைத்து போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு புட்டு புட்டு வைத்தார். கவினை, லாஸ்லியாவை தன்னை பற்றி பின்னால் பேசிய மற்ற போட்டியாளர்கள் என தனது மொத்த கோபத்தை அப்பட்டமாக காட்டி அனைவரின் முகத்திலும் பெய் பயத்தை வர செய்து விட்டார்.
இன்றைய முதல் ப்ரமோவில் அபியிடம், முகென் பின்னாடி நீ ஏன் சுற்றுகிறாய்? துர்கா யார் என்று உனக்கு தெரியுமா? அவன் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னானா? அது இதுன்னு நாரதர் வேலை பார்க்க அபி முகம் அப்படியே கோவத்தில் சிவக்கிறது.
bigg boss promo 2: வனிதா பார்த்த நாரதர் வேலை , சரியாக நகர, முகென் அபிக்கும் சண்டை வெடிக்கிறது. அபியை எல்லா போட்டியாளர்களும் சமாதானம் செய்ய, இதுவரை நான் பார்த்த அபி நீ இல்லை என உண்மையை உடைக்கிறார் முகென். (எங்களுக்கே எந்த அபி உண்மைன்னு புரியலப்பா) இதனால் பொங்கி எழும் அபி தனது கோர முகத்தை காட்ட, முகென் கோவத்தில் வழக்கம் போல் நாற்காலியை தூக்கி அபியை அடிக்க கை ஓங்குகிறார். (போன முறை கட்டில் பாஸ்)
மொத்தத்தில் இன்றைய நாள், வனிதாவின் நாரதர் வேலையுடன் இனிதே தொடங்குகிறது பிக் பாஸ் இல்லம்.
bigg boss promo 3: இன்றைய தினத்தின் 3 ஆவது ப்ரமோ பிக் பாஸ் ரசிகர்களை இது கனவா என கேட்க வைத்துள்ளது. காரணம், இதுவரை நியாயம் தர்மத்தை தட்டி கேட்காமல் சுற்றித் திரிந்து வந்த சாண்டி மாஸ்டர் இன்று கோபத்தில் வனிதாவை முறைத்துக் கொள்கிறார்.
அதற்கு காரணமே முகென் - அபியின் காதல் முறிவு. வனிதா அபியிடம் ஏதோ தனியாக பேச, அதனால் தான் சண்டை வெடித்ததாக சாண்டி வனிதாவை முறைக்கிறார்.