ஃபாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா, ரேஷ்மா, சித்தப்பு சரவணன் என 'கனமான' போட்டியாளர்கள் வெளியேற பிறகு உடல் பலத்தை பரிசோதிக்கும் வகையிலான கடுமையான டாஸ்க்குகளை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார் பிக்பாஸ். (அவங்களாம் போகட்டும்-னு வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரியே தெரியுதே...!??)
அதுகுறித்த புரமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு இரண்டு பேர் என பிக்பாஸால் நியமிக்கப்பட்டு இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தர்ஷன், சாண்டி, முகின் ஆகியோர் இந்த டாஸ்க்கில் நன்றாகவே தாக்குப்பிடித்தனர். கவின், சோஃபாவை தாண்டும் போது மல்லாக்க அடித்து விழ, சேரனோ ஒருக்கட்டத்தில் முடியாமல், மூச்சு முட்ட படுத்தேவிட்டார். தேசிய விருது படம் கொடுத்த இயக்குனர் இப்படி எல்லாம் கஷ்டப்படுவதை பார்க்கும் போது, உண்மையிலேயே நமக்கு அது வேதனையாகவே உள்ளது.
பல பேர் முன்னர், சரவணன் சேரனை ஒருமையில் அழைத்த போதே, இயக்குனர் வசந்தபாலன், 'நீங்கள் வெளியே வந்து விடுங்கள் சேரன்... உங்களது உயரம் என்ன என்பது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது' என உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார். நிச்சயம் அந்த கடிதத்தின் விவரம் சேரனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், சேரனின் இந்த நிலையை பார்க்கும் போது, வசந்தபாலன் சொன்னது உண்மையாகி விடக் கூடாதா என்று நமக்கே எண்ணத் தோன்றுகிறது.
ஒருபக்கம் இவ்வளவு அமளி துமளி நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் முகினிடம் அபிராமி லவ் புரபோஸ் செய்துக் கொண்டிருந்தார்.
இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்பு கேட்குது...!