bigg boss promo today : 2 வாரதுக்கு பிறகு மீண்டும் பிக் பாஸில் முக்கோண காதல் கதை தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் அடுத்த லெவலுக்கு போன இந்த காதல் கதையை சாக்லெட் கொடுத்து முடித்து வைத்ததே கமல்ஹாசன் தான்.
ஆனால் இந்த வாரம், நேற்றைய எபிசோட்டில் மொட்ட கடுதாசி டாஸ்க் ஆரம்பித்து மீண்டும் இந்த விஷயதுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்துள்ளார் நம்ம பிக் பாஸ். நேற்றைய எபிசோட்டை நன்கு பார்த்தவர்களுக்கு தெரியும். யாரு ஓவர் ஆக்டிங் என்று. 4 பெண்கள், சும்மா விளையாட்டுன்னு ஆரம்பித்த கவினின் காதல் நாடகம் மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றில் வந்து நின்றுள்ளது. அதுவும் காதல் இல்லை பிரண்ட்ஷிப்.
ஆரம்பத்தில் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்ற வேட்டையன் புகழ் கவின், போக போக மாமி கழுதையான கதையா? என்னன்னோமோ செய்து அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சம் என மொய் வைத்து கடைசியில் நான் வெளியே போறன் ப்பா.. நிலைமைக்கு வந்து விட்டார்.
இருக்கு இன்னிக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு பெரிய சீனே இருக்கு என்பது போல் காலை முதலில் வெளியான பிக் பாஸ் புரோமில் லாஸ்லியா கேட்ட மன்னிப்பு அவரின் ரசிகர்களை சோகமடைய செய்தது. இவரும் கவின் போல தான் ஆரம்பத்தில் மைனா, அழகி என வர்ணிக்கப்பட்டவர் இப்போது அனைவராலும் ஓவர் சீன் என அன்போடு அழைக்கப்படுகிறார்.’பிடிக்கும் எனக்கு பிடிக்கும்’ என லாஸ்லியாவுக்கு இதை தவிர வேற டையாலேக்கே தெரியாது போல.
அடுத்த புரோமில் வந்தது புதிய ஆப்பு., ஒருபக்கம் சாக்ஷி அமர்ந்து தனது வசந்த மாளிகை காதலுக்காக அழுகிறார். மற்றொரு புறம், நியூட்ரல் ரேஷ்மா, சத்தமே இல்லாமல் இருக்கும் சித்தப்பு, பிக் பாஸ் ஹீரோ தர்ஷன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கவினிடம் கேள்வி எழுப்புகிறார்கள். என்ன கேள்வி அது, ரொம்ப முக்கியம் பாஸ்” நைட் 2 மணிக்கு என்ன பிரண்ட்ஷிப்.” லாஸ்லியாவுடன் இரவு நேரத்தில் கவின் அடிக்கும் அரட்டை பற்றிதான் அவர்களின் கேள்வி. இந்த புரமோ மூலம் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு எதிராக மாறுகிறார்களா? என்ற கேள்வி எழும்ப தொடங்கியுள்ளது.
மூன்றாவதாக வெளியான புரோமோ தான் ஹைலைட் ஆஃப த டே. இதுவரை மச்சான், பரவால்ல டா, நீ சொன்னலா நன் ஃபீலே பண்ண மாட்டேன் டா என கூறிய கவின் “எப்பா சாமி என்ன விடுருங்கன்னு” 2 பொண்ணுங்ககிட்டையும் கதறாரு.
கவின் நல்லவரா? கேட்டவரா? என்பது தான் புரமோவை பார்த்த அனைவரின் கேள்வியும். இன்னிய எபிசோட்டு அதற்கு பதில் சொல்லும் என நினைக்கிறோம்.