பிக்பாஸ் வீட்டுக்குள் புது என்ட்ரி கொடுத்த மெகா டீம்! - புரமோ ரிலீஸ்
குருநாதா... குருநாதா... என்று பிக்பாஸையே மனம் குளிர வைக்க, பிக்பாஸ் மட்டுமல்லாது, அவரது காமெடிக்கு ரசிகர்களும் சரண்டராகிவிட அவரது வேல்யூ பன்மடங்கு இப்போது உயர்ந்துவிட்டது
குருநாதா... குருநாதா... என்று பிக்பாஸையே மனம் குளிர வைக்க, பிக்பாஸ் மட்டுமல்லாது, அவரது காமெடிக்கு ரசிகர்களும் சரண்டராகிவிட அவரது வேல்யூ பன்மடங்கு இப்போது உயர்ந்துவிட்டது
bigg boss promo today bigg boss today promo bigg boss latest promo - பிக்பாஸ் வீட்டுக்குள் புது என்ட்ரி கொடுத்த மெகா டீம்!
வரும் ஞாயிற்றுக்கிழமையோடு பிக்பாஸ் சீசன் 3 முடிவடைகிறது. கடந்த முதல் இரு சீசனை விட, இந்த சீசன் கூடுதல் ஹிட் என்றால் அது மிகையல்ல. அதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு பேர். ஒருவர் சாண்டி, மற்றொருவர் வனிதா.
Advertisment
வனிதாவை சீசன் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக யூஸ் செய்து கொண்டது பிக்பாஸ் டீம். அவரது 5 ரூபாய்க்கு ஊதியத்துக்கு 500 ரூபாய் பெர்ஃபாமன்ஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தினம் சண்டை, சச்சரவு, தகராறு என வனிதா இருந்த வரை அவரை ஓவர்டேக் செய்ய ஒருவராலும் இயலவில்லை.
ஒரேயொருமுறை வனிதாவை எதிர்த்து கேள்விக் கேட்டதற்காகவே ஹீரோவாக கொண்டாடப்பட்டார் தர்ஷன்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு மினிமம் நியாயம் செலுத்த நினைத்தார்களோ என்னவோ, பாதி எபிசோட் முடியும் போதே, வனிதா வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, மீண்டும் வீட்டிற்குள் வனிதா கொண்டுவரப்பட 'இது எந்த ஊரு நியாயம்?' என்று கேட்கத் தோன்றினாலும், வனிதாவால் இனி வீடு களைக்கட்டும் என்ற ஆவலில் கேள்வி எழுப்பாமல் சைலன்ட் ஆனார்கள் ரசிகர்கள்.
Advertisment
Advertisements
சாண்டி... தனது காமெடி, ஹியூமர் சென்ஸ் போன்றவற்றால் பிக்பாஸையே கட்டிப் போட்டு வைத்துவிட்டார். குருநாதா... குருநாதா... என்று பிக்பாஸையே மனம் குளிர வைக்க, பிக்பாஸ் மட்டுமல்லாது, அவரது காமெடிக்கு ரசிகர்களும் சரண்டராகிவிட அவரது வேல்யூ பன்மடங்கு இப்போது உயர்ந்துவிட்டது.
இன்னும் மூன்று நாட்களே மீதமுள்ள நிலையில், இன்றைய பிக்பாஸ் புரமோக்கள் வெளியிடப்பட்டுள்ள.
இதில், கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட தாடி பாலாஜி, மாகபா ஆனந்த், நடிகர் ரியோ, பிரபல விஜய் டிவி ஆங்கர்களான பிரியங்கா, ரக்ஷன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
எல்லாம் சரி... புரோமோவ கொஞ்சம் புரியுற மாதிரி எடிட் பண்ணுங்கப்பா!.