Advertisment

Bigg Boss Promo: பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து கலகம் செய்யும் மீரா

Bigg Boss Tamil Promo: கேரக்டர்ல இருந்து யார் வெளிய வந்தாங்க என மீராவிடம் கோபமாகக் கேட்கிறார் சாக்‌ஷி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Promo, Meera mithun

Bigg Boss Promo, Meera mithun

Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் 3 ப்ரோமோக்கள் வெளியிடப்படும். நிகழ்ச்சியை விட இந்த ப்ரோமோக்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

Advertisment

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நடிப்புக்கு மொழி தேவையில்லை, ஊமையாக இருக்கும் எத்தனையோ பேர் நடிக்கிறார்கள் என கோபமாகக் கத்துகிறார் மீரா. இங்க கலாச்சார வித்தியாசங்கள கொண்டு வராதீங்க என மறுபுறம் கோபமாகிறார் சாக்‌ஷி. எந்த காரணமும் இல்லாம 4 வாரமா என்ன நாமினேட் பண்ணுணீங்களே நான் எதாச்சும் சொன்னேனா என ஹை பிச்சில் மீண்டும் கத்துகிறார் மீரா. சாக்‌ஷியும், ஷெரினும் மறுபுறம் அழுகிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், கேரக்டர் சுவாரஸ்யமாக பண்ணும்போது, எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்கிட்டது மீரா தான். நீங்க எப்படி மீராவுக்கு பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ்ன்னு குடுப்பீங்க என்கிறார் மதுமிதா. சரி நீங்க எல்லாரும் மதுவுக்கே குடுத்துருங்க என்கிறார் மதுமிதா.

மூன்றாவதாக வெளிவந்துள்ள ப்ரோமோவின், கேரக்டர்ல இருந்து யார் வெளிய வந்தாங்க என மீராவிடம் கோபமாகக் கேட்கிறார் சாக்‌ஷி. இங்க கல்ச்சர் வித்தியாசம் கொண்டு வராத என்று சாக்‌ஷிக்கும் மீராவுக்கும் மீண்டும் சண்டை வருகிறது. ஆக இன்றைய பிக்பாஸின் 3 ப்ரோமோவிலும், மீரா தான் முக்கிய பிரச்னையாக இருக்கிறார்.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment