இரவு முழுவதும் நெருப்பு மூட்டி... பாவனி- மதுமிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்

Bigg boss promo updates advices to isaivani, punishment to pavani, madhu: பாவனி, மதுமிதாவுக்கு தண்டணை; இசைவாணிக்கு அறிவுரை; பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ

Bigg boss promo updates advices to isaivani, punishment to pavani, madhu: பாவனி, மதுமிதாவுக்கு தண்டணை; இசைவாணிக்கு அறிவுரை; பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ

author-image
WebDesk
New Update
இரவு முழுவதும் நெருப்பு மூட்டி... பாவனி- மதுமிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் போட்டிகளில் சரியாக பங்கேற்காத ஹவுஸ்மேட்ஸ்க்கு பிக் பாஸ் தண்டணை கொடுத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில், இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்க்கான, ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க்கில் கிராமத்தினர், நகரத்தினர் என இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில்,

இன்று நாள் முழுவதும், முழு ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொள்ளாத, ஒரு நபரை தேர்வு செய்து சொல்லணும் என பிக் பாஸ் குழு தலைவர்களிடம் கேட்கிறார். இதைக்கேட்டு போட்டியாளர்கள் எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள்.

நகரத்து குழுவின் தலைவர் நிரூப், சரியாக பங்கேற்காததால் பாவனியை சொல்கிறேன் என்கிறார். கிராமத்து டீமில் இருந்து மதுமிதா என்கிறார் அக்‌ஷரா ரெட்டி. மது கொஞ்சம் தூரமாக இருந்ததாக தோணுது என்றார்.

Advertisment
Advertisements

பின்னர் பிக் பாஸ், பாவனி மற்றும் மதுமிதாவுக்கு, நெருப்பு மூட்டி அதை இரவு முழுவதும் அணையாமல் பார்த்துக்கணும் என உத்தரவிடுகிறார்.

மற்றொரு ப்ரோமோவில், இப்படி திருடி தின்னலாமா என கத்துகிறார் தாமரை. இப்படி போட்டியாளர்கள் எல்லாம் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருக்க, அமைதியாக படுத்திருக்கிறார் இசைவாணி. அவரை கன்பெசன் ரூமுக்கு அழைக்கும் பிக்பாஸ், நெருப்பு ஆற்றலை குறிக்கும் நாணயம், யார் வசம் இருக்கு என கேட்கிறார். அதற்கு என்கிட்ட தான் இருக்கு என்கிறார். இசைவாணி.

இந்த சக்திகளை இன்னும் முறையாகவும், சுவாரஸ்யமாகவும், பயன்படுத்தலேயே இசைவாணி என்கிறார் பிக்பாஸ். வெளியில் வந்து சக போட்டியாளர்களிடம் இசைவாணி இதனை சொல்ல, ரூலை சரியாக செய்யததால், பிக் பாஸ் கண்டித்திருக்கிறார் என்கிறார் பிரியங்கா.

இப்படி சரியாக விளையாடாத போட்டியாளர்களை பிக் பாஸ் கண்டிக்கும் வகையில் ப்ரோமோ வெளியானதால் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv Pavani Reddy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: