ரைசாவுக்கு பார்ட்னர் ஆக இத்தனை தகுதிகள் வேண்டுமா? அவரே சொல்லிட்டார்!

Bigg boss raiza wilson wants these qualities in her life partner: லைஃப் பார்ட்னராக 11 தகுதிகள் வேண்டும்; பிக் பாஸ் ரைசா வில்சன் கண்டிஷன்ஸ் இதோ…

எல்லோரும் தனது லைஃப் பார்ட்னரிடம் சில தகுதிகளை எதிர்பார்ப்பார்கள் ஆனால் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சனோ நீண்ட பட்டியலை கொடுத்து, தனது லைஃப் பார்ட்னரிடம் தான் இந்த விஷயங்களை எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளார். அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் ரைசா, வாருங்கள் பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் கலந்துக் கொண்டவர் ரைசா வில்சன். மாடலிங்கில் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதற்கு பின்னரே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். பிக் பாஸை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். தன்னுடன் பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். தற்போது ரைசா, காதலிக்க யாருமில்லை, அலிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் வீட்டில் இருக்கும் ரைசா விதவிதமாக எடுத்துக் கொண்ட தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரைசா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு பிரேக்கப் ஆகியிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ரைசாவோ, 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரேக்கப் ஆனதாகவும்,  தற்போது புது உறவுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ரைசாவை விட்டுப் பிரிந்த அந்த காதலர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே இன்னொரு ரசிகர், உங்கள் லைஃப் பார்ட்னரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணாதிசயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு ரைசா 11 குணாதியங்களைக் கொண்ட பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். இந்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரைசா அளித்த பட்டியல் இதோ உங்களுக்காக… புத்திசாலித்தனம், கருணை, அக்கறை, ஜாலியானவராக இருக்க வேண்டும், வெற்றி பெற பாடுபடுபவராக இருக்க வேண்டும், மரியாதை அளிப்பவராக இருக்க வேண்டும், கடின உழைப்பு, பொறுப்பானவராக இருக்க வேண்டும், நேர்மையானவராக இருக்க வேண்டும், மெச்சூராக இருக்க வேண்டும், உண்மையானவராக இருக்க வேண்டும்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ரைசாவுக்கு லைஃப் பார்ட்னராக இத்தனை தகுதிகள் வேண்டுமா என மலைத்து போய் உள்ளனர். ரைசா எதிர்பார்க்கும் குணாதிசயங்களுடன் கூடிய லைஃப் பார்ட்னர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதனால் அவர் 5 ஆண்டுகளாக சிங்கிளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ரைசாவின் ரசிகர்களோ அவர் நல்ல லைஃப் பார்ட்னருக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள். முன்னதாக ரைசா வில்சனும், நடிகர் ஹரிஷ் கல்யாணும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் தெரியவந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss raiza wilson wants these qualities in her life partner

Next Story
கேரளா பக்கம் திரும்பிய ஷிவாங்கி… மோகன்லால் ரசிகையோ?Cooku with Comali SIVAANGI Tamil News: Sivaangi sung FAMOUS MOHANLAL SONG goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express