பிக் பாஸ் 2 போட்டியில் 106 நாட்களை கடந்து வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற ரித்விகா நடித்துள்ள விளம்பரத்தில் மாப்பிள்ளை பார்க்க முக்கிய கண்டிஷன் போட்டுள்ளார்.
Advertisment
மெட்ராஸ், காலா மற்றும் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனது கதாபாத்திரத்திற்கென தனித்துவம் படைத்தவர் ரித்விகா. இவர் தேர்ந்தெடும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்ததே.
பிக் பாஸ் ரித்விகா விளம்பரம் :
படங்களையும், கதாபாத்திரங்களையும் பார்த்து கவனித்து தேர்ந்தெடுப்பது போலவே, நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் செய்திருந்தார். பிக் பாஸ் என்ற மாபெரும் பிரபலமான நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தமிழக மக்களில் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
Advertisment
Advertisements
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு இவர் நடித்துள்ள கவரிங் நகை விளம்பரம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனது தாய்க்கு கவரிங் நகை போட்டு அழகு பார்க்கும் அவர், மாப்பிள்ளை பார்க்கும்போது தங்க நகைக்கு ஆசைப் படாமல் தனது புன்னகைக்கு மட்டுமே ஆசைப்படும் மாப்பிள்ளையை தேடச் சொல்கிறார்.