சூப்பர் மாடல் மகனுக்கு சூப்பர் அம்மா! யார் இந்த பிக் பாஸ் சம்யுக்தா?

முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், இரண்டாவது சீசனில் மாடல் யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் சாக்‌ஷி அகர்வால்.

By: October 24, 2020, 7:37:28 PM

இந்த வருடம் பிக் பாஸ் நான்காவது சீசனில் மாடலிங் துறையைச் சேர்ந்த சம்யுக்தா கார்த்திக் முக்கியமானவர்.

பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், இரண்டாவது சீசனில் மாடல் மற்றும் நடிகையுமான யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் சாக்‌ஷி அகர்வால் வரிசையில் இந்த ஆண்டு மாடலும் சீரியல் நடிகையுமான சம்யுக்தா கலந்துக் கொண்டுள்ளார்.


 

கேரளாவைச் சேர்ந்த சம்யுக்தாவுக்கு மாடல் மற்றும் நடிகை என்பதைத் தாண்டி, தொழில் முனைவோர், 4 வயது குழந்தையின் அம்மா என பல அடையாளங்கள் உண்டு. அதோடு ஒரு இன்டர்நேஷனல் சலூனின் franchise-ஐயும் சென்னையில் நடத்தி வருகிறார். அதோடு நடனத்திலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர் சம்யுக்தா. அவரது நடன வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனுடன் இணைந்து அதிக நடனமாடி இருக்கும் சம்யுக்தா, அவரின் நெருங்கிய தோழியும் கூட.

ஃபிட்னெஸ் மீது அதிக அக்கறை கொண்டவர் சம்யுக்தா, எப்போதும் யோகா செய்து தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். அதோடு ஸும்பா பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss samyuktha karthik vijay tv bigg boss hot star

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X