Bigg Boss Tamil: பிக்பாஸ் 3 சீசனில், போட்டியாளர்களை தேர்வு செய்த விதத்தில், பிக்பாஸ் குழு எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டதோ, போட்டியாளர்கள் அதைவிட ஒரு மடங்கு அதிக சாதுர்யமாக பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு தினத்தையும் கடத்தி வருகிறார்கள்.
பிக்பாஸின் கடந்த இரண்டு சீசனிலும், போட்டியாளர்களின் வாழ்வில் நடந்த துக்கங்களை வைத்து கேள்வி எழுப்பப்பட்டு, அவர்களை பேசச் சொல்லி சீரியல் ஸ்டீரியோடைப்பில் முதல் வாரத்தை கடத்துவது வழக்கம். அதுவே இந்த சீசனிலும் தொடர்கிறது. ஆனால், வேறுபாடு என்னவெனில், முன்னிரண்டு சீசனில் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத அந்த செண்டிமெண்ட், இந்த சீசனில் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில கமலை தான் எல்லாருக்கும் பிடிக்குது ; பாத்திரம் கழுவ விருப்பமில்லைன்னா டாய்லெட் கழுவ போ - அடடா என்ன வசனங்கள்
பிக்பாஸ் பார்க்கும் ஆண்களைக் கூட, போட்டியாளர்களின் ஹெவியான சோக நினைவுகளை பகிர வைத்து கண் கலங்க வைத்திருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களின் அட்டகாசமான புத்திசாலித்தனம். பிக்பாஸ் இப்படித்தான் இருக்கும் என்பதை, இரண்டு சீசனாக இன்ச் பை இன்ச் பார்த்து, படித்து, கரைத்து குடித்து வந்திருக்கின்றனர். தங்களுக்குள் எப்படியெல்லாம் பிக்பாஸ் பகைமை வளர்ப்பார் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் போட்டியாளர்கள் அதற்கு ஏற்றவாறு அண்டர் பிளே செய்து வருவது செம!.
ஆனால், பிக்பாஸ் யாரு? பெரிய பாஸ் அல்லவா? நாம் இப்படி யோசித்தால், பாஸ் எப்படி யோசிப்பார்!! ஆகையால், அடுத்து வரும் வாரங்களில், பல புதுமையான வெரைட்டியான ஐட்டங்களை நாம் எதிர் பார்க்கலாம். (அட டாஸ்க்கை சொன்னேன் பா!)
Bigg Boss 3, Kamal Haasan
இந்நிலையில், பிக்பாஸ் 3வது சீசனின் இன்றைய முதல் வார இறுதியில், 'குடும்பத் தலைவர்' கமல்ஹாசன் வந்து போட்டியாளர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கான புரமோவும் இன்று வெளியாகியுள்ளது. 'காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது' என்ற கேப்ஷனுடன் கமல் அறிமுகமாகும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் காணலாம்.
நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று சாண்டியும், கவினும் பாத்ரூமில் அடித்த நாராசமான கூத்தை கொஞ்சம் கண்டியுங்கள் பாஸு! அப்படியே ஏதாச்சும் குறும்படம் சிக்கினா அதையும் போட்டுவிடுங்க!!