Bigg Boss Season 3 Vanitha vijayakumar eviction:பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கி வந்த வனிதா விஜய குமார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்க 80 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி விதிகளின்படி ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில் சேரன், சாண்டி, கவின் லோஸ்லியா, வனிதா விஜயகுமார், முகின், தர்ஷன் உள்ளிட்டோர் உள்ளனர்.
கடந்த வாரம் இயக்குனர் சேரன் சீக்ரெட் அறைக்கு அனுப்பப்பட்டு பிறகு மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பங்கேற்க வைக்கப்பட்டார். பார்வையாளர்கள் குறைவாக வாக்களித்ததால் இயக்குனர் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று கூறியபோது வனிதா விஜயகுமார் கண்ணீர் விட்டு அழுதார்.
இதனிடையே, பிக் பாஸ் வீட்டுக்கு பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரை வரவழைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் லோஸ்லியாவின் குடும்பத்தினர், வனிதாவின் குழந்தைகள், தர்ஷனின் குடும்பத்தினர் ஆகியோர் வந்து சந்தித்தனர். இதில் வனிதா சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை திருப்பங்கள் என விருவிருப்பாக இருப்பதற்கு காரணம் வனிதா விஜயகுமாரால் களைகட்டியது.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சிக் வெளியிட்டுள்ளது. அதில் கமல் ஹாசன் வெளியேற்றப்படுவோரின் பெயர் அடங்கிய அட்டையுடன் வந்து பேசுகிறார். “அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் உரையாடும் கமல்ஹாசன், இப்போது எவிக்ஷனை நோக்கி இங்கே இருக்கும் ஐவரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதில் உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறுகிறார். அப்போது போட்டியாளர்கள் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் வனிதா விஜய குமார் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளனர்.