‘நீங்க பிக் பாஸ் போறீங்களா?’ ரசிகர் கேள்வி; சஸ்பென்ஸ் சொன்ன விஜய் பட நடிகை

பிகில் பட நடிகையிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறீர்களா என்று கேட்க அவர் அதற்கு சஸ்பென்ஸ் பதில் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

bigg boss season 4, bigg boss, vijay tv, bigg boss amritha aiye, amirtha aiyer, bigil movie actress, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர், பிகில், விஜய், அம்ரிதா அய்யர், அமிர்தா அய்யர், vijay movie actress, amirtha, amritha, bigg boss season 4 contestant

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பிரபலமான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், பிகில் பட நடிகையிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறீர்களா என்று கேட்க அவர் அதற்கு சஸ்பென்ஸ் பதில் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் நடைபெற்றுள்ளது. இந்த 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ், 2வது சீசனில் ரித்விகா, 3வது சீசனில் முகேன் ராவ் ஆகிய 3 பேர் பிக் பாஸ் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப் போனது. இதனால், தொலைக்காட்சி பார்வையாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடைபெறு என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4 புரமோ வெளியானது. இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகச்சி நடப்பது உறுதியானது. இதுவரை சீசன் 4ன் இரண்டு புரமோ வெளிவந்துள்ள நிலையில் 3ஆம் புரமோவில் தான் ஒளிப்பரப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா? என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் நிகழ்ச்சி நடப்பது உறுதியானது பிக் பாஸ் சீசன் 4-இல் யார் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

பிக் பாஸ் 4வது சீசனில் நடிகை கிரண், சீரியல் நடிகை ஷிவானி, விஜய் டிவி காமெடி நடிகர் புகழ், அணு மோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளப் போவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.


இந்த நிலையில், விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான பிகில் பட நடிகை, அம்ரிதா அய்யர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இடையே பேசப்பட்டது.

இது குறித்து, அம்ரிதா அய்யரின் சமூக ஊடகக் கணக்கில் ரசிகர் ஒருவர் “நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறீங்களா?” கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அம்ரிதா அய்யர் “தெரியல, ஆனால், சஸ்பென்ஸாக இருக்கட்டும்” என்று பதிலளித்துள்ளார். அவர் பதிளித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்று பல யூகங்கள் வந்தாலும், நிகழ்ச்சி தொடங்கும்போதுதான் தெரியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 4 contestant bigil movie actor amritha aiyar answer viral video

Next Story
ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருமானவரித் துறை வழக்கு: விளக்கம் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்ar rahman, music director ar rahamn, income tax department, IT department case against ar rahman, music director ar rahman, ஏஆர் ரஹ்மான், வருமானவரித் துறை வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், income tax department move to against music director, chennai high court notice to ar rahaman
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express