ஷிவானி, ரம்யா, கேபிரில்லா… பிக் பாஸ் சம்பளம் இவ்வளவுதானா?

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள ஷிவானி, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றிய தகவல் சமூக ஊடங்களிலும் இணையத்திலும் வெளியாகி உள்ளது.

By: Updated: October 18, 2020, 11:21:42 AM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள ஷிவானி, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றிய தகவல் சமூக ஊடங்களிலும் இணையத்திலும் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, கொரோனா தொற்று பரவல் காலமாக இருந்தாலும் பாதுகாப்பாக நிகழ்ச்சியை நடத்திவிட வெனெடும் என்று விஜய் டிவி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொடங்கி ஒளிபரப்பு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் ஒரு பதினைந்து நாட்களை நிறைவு செய்கிறது. இந்த வார இறுதியில் யார் வெளியேற்றப்படுவார்கள் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கும் கமல்ஹாசன் என்ன கூறுவார் என்று தொலைக்காடிச் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களின் ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்று போட்டியாளர்களின் சம்பளப் பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த பட்டியலின்படி, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளர்களான ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தங்கி நிஷா, ரியோ ராஜ், ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்து, சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன் ஆகியோர் ரூ.1.50 லட்சம் சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள போட்டியாளர்கள், அனிதா சம்பத், கேப்ரில்லா சார்ல்டன், சோம்சேகர் மற்றும் அஜீத் ஆகியோர் ஒரு நாளைக்கு 1 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் சம்பளம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான பட்டியல் குறித்து, பிக் பாஸ் 4 நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் இந்த சம்பளப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss season 4 contestants shivani narayanan ramya pandian ramya pandian gabriella charlton salary list leaks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X