விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், ராஜா ராணி சீரியல் ஹீரோ சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த டான்ஸ் வீடியோ பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 ஜூன் மாதம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 4 நிகச்சியில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை விஜய் டிவி நிர்வாகம் போட்டியாளர்கள் யார் என்று அறிவிக்கைவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மற்ற 3 சீசன்களைப் போலவே, இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலான மூவ்மெண்ட் டான்ஸில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி புரோமோ ரசிகர்களிடையே நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களாக பலருடைய பெயர்கள் வதந்திகளாக பேசப்பட்டது. ஆனால், இதில், பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், விஜய் டிவி நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனை கௌரவிக்கும் வகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் ஜோடி சஞ்சீவ் ஆல்யா மானசா இருவரும் இணைந்து கமல்ஹாசனுக்காக நடனமாடிய வீடியோ எனக் கூறி சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது விரைவில் விஜய் டிவியில் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த டான்ஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஷோவிற்கு ஆடியதுதானே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதனால், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் தொடங்கிவிட்டதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"