ரேகா, அனிதா சம்பத்… பிக் பாஸ் போட்டியாளர்களாக இடம்பெற்ற ஆச்சரிய லிஸ்ட்

தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்டத் துவக்கவிழாவுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்ற யூகங்களைத் தாண்டி பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

Bigg Boss Tamil 4
Bigg Boss Tamil 4

Bigg Boss Season 4: தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்டத் துவக்கவிழாவுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்ற யூகங்களைத் தாண்டி பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

விஜய் டிவியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்று தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்த நிலையில் விஜய் டிவி கண்டிப்பாக இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது என்று உறுதி செய்தது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மற்ற சீசன்களைப் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று அறிவித்து புரோமோவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யார் என்று பல யூகங்கள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.

அந்த பெயர்களில் நடிகைகள் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் என பலருடைய பெயர்கள் பேசப்பட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்குவதற்கு முன்புகூட ஊடகங்களில் ஒரு நிழல் பட்டியல் வெளியானது. இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஆயிரம் யூகங்களுக்கு மத்தியில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கியது.

பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டிய கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டுகிறார். இதற்கு முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன்களை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிகப் பெரியதாக உள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் பெரிய சோபா, டைனிங் டேபிள் என அனைத்தும் சற்று பெரிதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் சமையல் அறையில் உள்ள ஸ்டவ்வில் நான்கு பர்னர்கள் இருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே எரியும் என்றும் அதனால் போட்டியாளர்கள் வயிறும் சற்று எரியும் எனக் கூறி கமல்ஹாசன் கிண்டல் செய்கிறார்.

இந்த பிக் பாஸ் வீட்டில் பெட்ரூமையும் பாத்ரூமையும் சங்கிலி போட்டு பூட்டி வைத்திர்க்கிறார்கள். இதைப் பார்த்த கமல்ஹாசன் ஏன் இப்படி என கோபமாக கேட்டு விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜெயிலில் கம்பிக்கு பதிலாக இந்த சீசனில் கண்ணாடி வைத்துள்ளார்கள். அதோடு, பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஒரு போன் வைத்துள்ளார்கள். அதில் பிக் பாஸிடம் இருந்து மட்டுமே அழைப்புகள் வரும்.

பார்வையாளர்கள் வீடியோ கால் மூலம் பார்க்க வைக்க ஏற்பாடு

பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது பார்வையாளர்கள் இருக்கமாட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால், பார்வையாளர்கள் தற்போது வீடியோ கால் மூலமாக டிஜிட்டலாக பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெரிய திரையில் அவர்கள் அனைவரது முகமும் காட்டப்படுகிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க வீடியோ காலில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி, மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர் என பலரிடமும் கமல்ஹாசன் நன்றி கூறினார்.

முதல் போட்டியாளர் – ரியோ ராஜ்

பிரமாண்ட விழாவாகத் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ்ஐ கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் அவரிடம் சமீபத்தில்தான் அப்பாவாக ஆகியிருக்கிறீகள் எப்படி தைரியமாக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீர்கள் என கமல் கேட்டதற்கு, “பயத்தோடு தான் வந்தேன். கொரோனா பயம்லாம் இல்லை. நம்மால் யாரும் ஹர்ட் ஆகக் கூடாது, நம்மையும் யாரும் ஹர்ட் செய்து விட கூடாது என்பது பற்றி பயம் இருக்கிறது” என கூறினார். தனது கணவர் குறித்து பேசிய ரியோ மனைவி ஷ்ருதி ‘ரியோ ரொம்ப எமோஷ்னலான பெர்சன், அதிகம் கோபப்படுவார்’ என கூறியுள்ளார்.

2வது போட்டியாளர் – சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி. நடிகை சனம் ஷெட்டி தன்னைப் பற்றி வீடியோவில் அறிமுகப்படுத்தும் காட்சி ஒளிபரப்பட்டது. அதற்குப் பிறகு, சனம் ஷெட்டி தான் இதற்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசனி சந்தித்து பேசியதை நினைவுகூர்ந்தார்.

3வது போட்டியாளர் – நடிகை ரேகா

கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 3வது போட்டியாளராக நடிகை ரேகாவை அறிமுகப்படுத்தினார். ரேகா தன்னைப் பற்றி கூறும்போது, “நான் தனியாக வாழக் கற்றுக்கொள்ளப் போகிறேன். உள்ளே போய் என்னுடைய கேரக்டர் என்ன அப்படி என்று தெரிந்துகொள்ளத்தான் முதலில் நான் இங்கு வருகிறேன். நான் என்னை பற்றி தெரிஞ்சுக்கனும். நான் இவ்வளவு நாள் சார்ந்தே வாழ்ந்திருக்கிறேன். அவர்களை எல்லாம் சார்ந்து வாழாமல் நான் சுயமாக வாழப் படிக்கனும். பாஸிட்டிவ்வாக இருக்கனும். நம் ஒருவரை ஜட்ஜ் பண்ணக் கூடாது. அதனால், இந்த பிக்பாஸ் தனக்கு ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும்” என்று கூறினார்.

பின்னர் ரேக்காவுடன் நடிகை ஊர்வசி வீடியோ காலில் பேசினார். அதற்கு அடுத்து, அமெரிக்காவில் படித்துகொண்டிருக்கும் ரேகாவின் மகள் வீடியோ காலில் பேசி ரேகாவை பிக் பாஸ் வீட்டுக்குள் வழியனுப்பி வைத்தார்.

4வது போட்டியாளர் – பாலாஜி முருகதாஸ்

நடிகர் கமல்ஹாசன் பாலாஜி முருகதாஸை ஆரோக்யத்தில் அதிக அக்கறை கொண்ட போட்டியாளர் என்று அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றி வீடியோவைக் காட்டும்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை காட்டினார்கள்.

கமல்ஹாசன் பாலாஜி முருகதாஸ் இடம் இங்கே எதை எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு, “2017-ல் பாடி பில்டிங்கில் பல பட்டங்களை வென்றாலும் தன்னை மீடியா அங்கீகரிக்கவில்லை. அந்த அங்கீகாரத்துக்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.” என்று கூறினார். ஆனால், கமல்ஹாசன் 2 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தன்னை அழுவலகத்திற்கு அழைத்து பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.

5வது போட்டியாளர் – செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்

சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பற்றி ஒரு அறிமுக வீடியோ ஒளிபரப்பட்டது. அதில், டிவியில் இல்லாமல் என்னை யார் வெளியே பார்த்தாலும் நீங்கள் ரொம்ப உயரமாக ஃபேட்டாக இருப்பீர்கள் என்று நினைத்தோம். நீங்கள் என்ன ரொம்ப குட்டியாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இது எனக்கு ஆரம்ப கட்டத்தில் ஒரு தடங்கலாகக்கூட இருந்தது. நான் செய்தி வாசிப்பாளராக வேண்டும் எனும்போது முதலில் நல்லா சாபிடனும் பலமே இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து உடைத்து வெளியே வந்தேன்.

பள்ளிக்கூடத்தில் இருந்தே எனக்கு தமிழ்னா ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணம், அப்பா ஒரு எழுத்தாளர். அதையும் தாண்டி எனக்கு அமைந்த தமிழ் ஆசிரியர்கள் ரொம்ப ரொம்ப நல்ல தமிழ் ஆசிரியர்களாக அமைந்துவிட்டார்கள். அதனாலேயே அந்த ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது. தமிழ் ஒரு மொழி என்கிறதைத் தாண்டி அது ஒரு கடல் அதைப் புரிந்துகொள்வதற்கு பல வருஷம் ஆகும்.” என்று தமிழ் பற்றி பெருமையாகப் பேசினார்.

6வது போட்டியாளர் – நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் டான்ஸ் உடன் அறிமுகமானார். அவரிடம் நீங்க வீட்டை விட்டே அதிகம் போனதில்லை. இதுதான் பெரிய அவுட்டிங் என கேள்விப்பட்டேன் என கமல்ஹாசன் கூறினார்.

ஷிவானி நாராயணனை அவருடைய அம்மா வீடியோ காலில் பேசி பிக் பாஸ் வீட்டுக்குள் வழியனுப்பி வைத்தார்.

7வது போட்டியாளர் – நடிகர் ஜித்தன் ரமேஷ்

பிரபல தாயாரிப்பாளரின் மகன் எனக் கூறி நடிகர் ஜித்தன் ரமேஷை அடுத்த போட்டியாளராக கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் மற்றும் நடிகர் ஜீவாவின் அண்ணன்தான் ரமேஷ். இவர் ஜித்தன் படம் மூலமாக பாப்புலர் ஆனதால் அவர் ஜித்தன் ரமேஷ் என்றே அறியப்படுகிறார். நடிகர் ஜீவா வீடியோ கால் மூலம் தனது சகோதரர் ரமேஷுக்கு வாழ்த்து கூறினார்.

8வது போட்டியாளர் – பாடகர் வேல்முருகன்

சினிமாவி பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகர் வேல்முருகன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘கட்டாந்தரை ஓனாலதான் கம்மாக்கரை நிரானது’ என்ற பாடலை பாடியபடி அறிமுகமானார்.

பாடகர் வேல்முருகன் தன்னைப் பற்றி கூறுகையில், “இந்த அளவுக்கு வந்ததே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தனிமையிலேயே இந்த வருஷம் போய்விடும் என நான் நினைத்தேன். ஆனால் பிக் பாஸ் மூலமாக அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம்.” என்று கூறினார்.

அதோடு, பாடகர் வேல்முருகன் நடிகர் கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார்.

விஜய் மியூஸிக் சேனல் துவக்கம்

நடிகர் கமல்ஹாசன் விஜய் மியூசிக் என்ற புது சேனலை அறிமுகப்படுத்தினார். டிவியை தொடங்கி வைத்த கமல்ஹாசன், “ஒரு இசை ரசிகனாக எனது கோரிக்கை.. அன்பு கட்டளை என எடுத்துக் கொண்டாலும் சரி. சினிமா இசை என்பது ஆலமரம் அதன் அடியில் மற்ற சிறிய பயிர்கள் வளர்வது கடினம். அதனால், அதற்கு தனி களம் வேண்டும் என நான் நினைக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இதற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

9வது போட்டியாளர் – ஆரி

நடிகர் ஆரி, தன்னைப் பற்றிய அறிமுக வீடியோவில் கூறுகையில் “இன்று எனக்கு மூன்று வேளை சோறு இருக்கிறது. ஆனால், சென்னைகு வரும் போது ஒரு வேளை தான் சோறு. சென்னையில் நான் இறாங்கும்போடு எதுவுமே இல்லாமல் கையில் மஞ்சப்பையை தூக்கிக்கொண்டு இறங்கினேன். அதே மனநிலையோடுதான் நான் இந்த பிக் பாஸ்க்குள்ள போகனும்னு முடிவு எடுத்தேன். நாம் அடையாளங்களை சுமந்துகொண்டு போனா, அது போன்ற ஒரு சுமை வேறு எதுவுமே கிடையாது. நான் அதிகம் கோபப்படுவேன் என மனைவி என்று மனைவி கூறினார். அது என்னுடைய நேச்சர் கேரக்டர். நாம் நம்முடைய வேளைகளை சரியா செய்தால் போதும்” என்று ஆரி கூறினார்.

பிக் பாஸ் மேடைக்கு வந்த ஆரி, கமல்ஹாசன் தன் அறக்கட்டளையை துவங்கி வைத்தது பற்றி நினைவுகூர்ந்தார். மேலும், அவர் மரபணு மாற்ற விதைகள் பற்றி விமர்சித்துப் பேசினார்.

10வது போட்டியாளர் – சோம் சேகர்

சோம் சேகர், முதலில் எம்.எம்.ஏ என்றால் என்ன என்பதை சொல்லுங்கள் என்று கமல்ஹாசன் கேட்க, அதற்கு அவர், “எம்.எம்.ஏ என்றால், மிக்ஸ் மார்ஷியல் ஆர்ட் என்று கூறினார். அதாவது, கராத்தே, பாக்ஸிங் எல்லாம் மிக்ஸ் ஆன ஒன்று. எம்.எம்.ஏ மீது அதிக ஈடுபாடு இருந்ததால் தான் 5 வருடமாக வாழ்க்கையில் அதை மட்டுமே செய்து வந்தேன். அதனால், திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை, சொந்தமாக வண்டி கூட இல்லை என கூறினார். மேலும், அவர், தான் சிங்கில் தான் என தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் காதல் வருமா என்றால் தெரியவில்லை என ஒப்பனாக கூறியுள்ளார் சோம் சேகர்.

11 வது போட்டியாளர் – நடிகை கேப்ரியலா

நடிகை கேப்ரியலா பிரம்மாண்ட நடனத்துடன் அறிமுகமானார். நடிகை கேப்ரியலா தான் 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்ததாக கமல்ஹாசனிடம் கூறினார். அதற்க்கு கமல்ஹாசன் நான் உங்க அக்கா கிட்ட சொல்றேன்” என கூறினார்.

12வது போட்டியாளர் – அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலக்கிய அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

நான் எங்க தெருவுல எல்லோரையும் கலாய்ப்பேன். எதிர்த்தவீடு பக்கத்துவீடு என கலாய்ப்பேன். எங்க அம்மா கலக்கப்போவது ஆடிஷன் வருது நீ போ என்றார்கள். அதெல்லாம் போன செலக்ட் ஆகமாட்டேன் மா. அது விஜய் டிவிமா என்று சொன்னேன். இல்லடி நீ முயற்சி பண்ணுனு சொன்னாங்க. அவங்க தள்ளிவிட்டதால என்னவோ நான் உள்ள வந்தேன். நான் வந்தது முடிவு பண்ணது என்னனா நான் டைட்டில் வின் பண்ணனும். ஒரு காமெடி பிளாட்ஃபார்ம்ல அவங்களுக்குனு ஒரு எமோஷனலே கிடையாதுனுதான் நினைக்கிறவங்கதான் இன்னைக்கும் வாழ்ந்துகிட்டிருக்காங்க. வடிவேல் சார் சொல்றமாதிரி இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்வான்ற மாதிரி போறவன் வறவன் எல்லாம் அடிச்சுட்டு போவான். அதனால், அறந்தாங்கி நிஷாவ மட்டும் பார்க்காதீங்க… நிஷாவுக்குள்ள ஒரு மனசு இருக்கிறது. அது வலிக்கும்னு யாருக்கும் தெரியாது. அதை அவ்வளவு சீக்கிரம் நாங்க வெளிய காட்டவே மாட்டோம். அதுதான் உண்மை. என் கணவர் குழந்தையும் விட்டு பிரிந்து வருகிறேன். நிச்சயம் ஜெயிப்பேன். கப்பு முக்கியம் பிகிலு.. என அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.

13வது போட்டியாளர் – நடிகை ரம்யா பாண்டியன்

விஜய் டிவியில் கலக்கிவரும் நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார்.

ரம்யா பாண்டியன், வைரல் ஆன மொட்டைமாடி போட்டோஷூட் பற்றி பேசினார். எனக்கு பல விதமான ரோல்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான், அந்த போட்டோ வைரலான பிறகு கிளாமரான போட்டோஷூட் எதுவும் எடுக்கவில்லை என ரம்யா பாண்டியன் கூறினார்.

14வது போட்டியாளர் – சம்யுக்தா சன்முகநாதன்

தொழிலதிபர் மாடல் ஃபிட் மாம் என பண்முகம் கொண்ட சம்யுக்தா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக அறிமுகமானார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். சம்யுக்தா பற்றி ஒரு அறிமுக வீடியோ காட்டப்பட்டது.

15வது போட்டியாளர் – சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி தனக்கு எதுவும் பெர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என கூறினார். பின்னர், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

16வது போட்டியாளர் – பாடகர் ஆஜித் காலிக்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாடகர் ஆஜித் காலிக் கடைசி போட்டியாளராக அறிமுகமானார்.

ஒருவழியாக இந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் டாஸ்க்குகளில் வெற்றி பெற்று 100 நாள் இருந்து யார் டைட்டிலை வெல்லப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 4 started kamal haasan contestants introduction ramya pandian shivani narayanan velmurugan rekha

Next Story
பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த கண்ணம்மா: இது செமையா இருக்கே..!vijay tv, bharathi kannamma serial, kannamma memes, kannamma memes on bigg boss season 4, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா மீம்ஸ், பிக் பாஸ், vijay tv bigg boss, kannamma bigg boss memes, tamil viral news, tamil tv serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com